9 சிரியா, இயற்கைவளம் ததும்புகின்ற எழில் நிறை நாடு. தபிகள் நாயகம் அவர்களின் தலைமையில் சென்ற வணிகரின் குழு, அந்த நாட்டின் வனப்பினைக் கண்டு மகிழ்ந்தவாறு ஷரம் நகரினை நோக்கி நடக்கின்ற வழியில், நெல் வயல்கள் காட்சிக்கு வருகின்றன. அறுவடையான வயல்கள் அன்று. அறுவடையை எதிர்நோக்கியுள்ள முற்றிய நெற்கதிர்களைத் தாங்கியுள்ள செழிப்புடைய வயல்கள். தலைசாய்ந்த நிலையிலே நிற்கின்ற நெற்கதிர்களைக் கண்டதும், நாணித் தலைகவிழ்ந்து நிற்கின்ற நற்குல நங்கையின் நினைவு தோன்றுவது இயல்பு. பல கவிஞர்கள் இதுபற்றிப் பாட்டிசைத்துள்ளனர். ஆனால், உமறுப் புலவரின் கற்பனை அலாதியானது. பெண்ணிற்கும், நெல்லிற்கும் உள்ள ஒற்றுமையை உமறுப் புலவரின் உள்ளம் ஊன்றிச் சிந்திக்கின்றது. பெண், ஒரு மனையில் பிறந்து, இன்னொரு மனைக்கு வாழச் செல்கிறாள். நெல்லும் அப்படியே ; ஒரு வயலில் நாற்றாக வளர்ந்து, இன்னொரு வயலில் நடவாகிப் பயிராகச் செழிக் கின்றது. பெண்ணும் கருக்கொள்கிறாள். நெற்பயிரும் அப் படியே. பெண்களில் சிலர், பேறுகால வேளையிலே தம் கணவன் மீது கோபம் கொள்வதுண்டாம். நெற்பயிர் அப்படிச் செய்வதில்லை! நல்ல பெண், தான் வாழச் செல்கின்ற வீட்டில் திருவும் செல்வமும் பெருகக் காரணமாவாள். அதனையே நெற்பயிரும் செய்யத் தவறுவதில்லை. இவ்வரிய ஒற்றுமை யைப் பாட்டாக்கி, படிப்போர் உள்ளங்களைத் தம்பால் பற்றி இழுக்கின்றார் உமறு என்னும் உயர் தமிழ்ப் புலவர். ஒருமனைப் பிறந்து, ஒருமனை யிடத்தினில் உறைந்து கருவரத் தரித்து ஈன்று,தன் கணவனை இகழாப் பெருவரம் புறும் பெண்கொடி யெனத்தலை சாய்த்துத் திருவும் செல்வமும் திகழ்தரக் காண்பன செந்கெல். சீ.பு.4
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/66
Appearance