உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 உவமை என்பது இதுதான். உப்பிற்கும் ஆகா வெற்று உவமானத்தால் யாது பயன்? நபிகள் நாயகம் அவர்களின் ஷாம் நகரச் செலவு நேர்ந்திராவிடில், உமறுப் புலவரின் இவ் வரிய பாடலை நாம் நுகர இயலாதல்லவா? எனவே, நபிகள் நாயகம் அவர்களின் ஷாம் நகரப் பயணம் ஒருவகையில் உமறுப்புலவருக்கு வெற்றியாகி நம்மையும் மகிழ்விக்கின்றது. நபிகள் நாயகம் அவர்களுடன் ஷாம் நகரம் சென்ற அனை வரும் தம்தம் வணிகத்தில் என்றுங்காணா வெற்றிகண்டு நாடு திரும்புகின்றனர். மக்கமா நகரிலிருந்து புறப்படுங்கால், மைசுறா எனும் தமது கணக்கர்பால் கதிஜாப்பிராட்டியார் கூறியபடி, கனவிற்குப் பலன் சொல்லுகின்ற ஊசா என்னும் அறிவுசால் மேதையைச் சந்தித்து விட்டால், வணிகத்தின் மூலம் பெற்ற ஆதாயத்துடன் கனவின்பலன் என்கின்ற ஆதா யத்தையும் சுமந்தவாறு மக்கமா நகரினுள் நுழையலாம். இது மைசரு என்கின்ற கணக்கரின் கவலை. ஊசர என்பவர், கனவிற்குப் பலன் உரைப்போர் மட்டும் அல்லர். சிறந்த நல்ல ஞானி. அவர் உறைகின்ற அறச்சாலையின் அருகிலேயே வணிகக்குழு வந்து தங்குகின்றது. முக்காலமும் அறிந்த, மூன்று வேதங்களும் கற்ற முதறிஞ ரான அந்த ஞானி, மனித குலம் உற்ற கீழ்மையை நீக்கி, மேல்நிலைப்படுத்த, இக்காலத்தே இறுதிநபி தோன்றியிருக்க வேண்டும். அந்த மாநபி இன்றிவ்விடம் வந்து தங்குவார் என்று கணித்து வைத்துள்ளார். எனவே தம் கணக்குத் தப்பா தெனும் உ றுதியில் வணிகக் கூட்டத்தின்பால் பார்வையை வீசினார். அக்கூட்டத்தின் மத்தியிலே ஒருவரைக் காண்கின்றார். அடங்கா ஆவலுடன் எழுந்தோடி வந்து, திருந்தார் அடல் அரியே தரு செழுமாமழை முகிலே பெருந்தாரணி தனில்நும்பதி குலம் பேரவை யனைத்தும் வருந்தாது உரை யீரென்றனன் மறையோதிய மதியோன். நபிகள் நாயகம் அவர்களைக் கண்டு, அவர்களைக் கண்டு, அவர்களின் அருகில் வந்து அமர்ந்த ஊசா என்கின்ற அந்த ஞானி, உங்கள் ஊர், ற