உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 குறைவிலாது எழுதி முத்திரை பொருத்திக் குறித்தவன் இடத்தினில் கொடுத்துக் கறையிலா மதியம் எனும்மயில் சுதீஜா கரத்தினில் அளித்திடு என்றான். இத்தகு எளிய இனிய சொற்கள் நிறைந்த விகிதத்தை ஆள் ஒருவன் வசம் அனுப்புகின்ற போது, சென்றவர்களைப் பற்றிய செய்தி அறியத் துடித்துக் கொண்டிருந்தார்கள் கதீஜாப் பிராட்டியார், தினந்தினமும் மைசருவிடமிருந்து கடிதம் வரும் என எதிர்பார்த்தார்கள். அதே சிந்தனையில் மூழ்கி இருந்தவர்கள் ஓர் தினம் ஆழ்ந்த தூக்கத்தில் அழுந்தி விட்டார்கள். தூக்கத்தில் கனவு காண்கின்றார்கள். கனவு, கதாசிரியர்கட்கும், ஒரு அரிய வரப்பிரசாதம். காவியம் புனைவோருக்கும். கதீஜாப் பிராட்டியாரின் கனவு, உமறுப் புலவரின் கற்பனைப் புரவி தங்குதடையின்றிச் செல் வதற்கான பாட்டை! கரடு முரடான பாட்டையன்று. மிகச் சிறந்த ராஜபாட்டை! ஷாம் நகரின்கண் தமது வர்த்தகப் பணிகளை முடித்துக் கொண்.. நபிகள் நாயகம் அவர்கள், தம் சகாக்கள் புடைசூழ, ஒரு அழகிய தோப்பினிடையே வந்து தங்கு கின்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் வந்து தங்கி இருந்த தோப்பினில் நிறைந்து திகழ்ந்த கனிதரும் மரங்களைப் பாடு கின்றார் உமறு: தேன்குடம் அனைய முன்புறக் கனிகள் திகழ்தரச் செறிந்தன ஒருபால் மாங்கனி அமுதத் திவலைகள் தெறிப்ப மலிதரச் சொறிவன ஒருபால் பூங்குலைக் கூன்காய் பொன்பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒருபால் தீங்கில் பொன் கலசம் விண்டுசெம் மணிகள் சிந்தும் மாதுளைத் திரள் ஒருபால்