69 இத்தகு கனிதரும் மரங்கள் அடர்ந்த சோலையிலே அழகிய ஓடைகளுக்கு மத்தியிலே, அல்லியும் தாமரையும் அடர்ந்து மலர்ந்த தடாகத்தின் இடையிலுள்ள விரிந்த இடத்திலே, அறிவினுக்கறிவாய் அரசினுக்கு அரசாய் அணியி னுக்கணியதாய்த் திகழுகின்ற மாநபிகள் நாயகம் வந்து. தங்குகின்றார்கள். அதுபோது, வானிலிருந்து எண்ணிலடங்கா அமரர்கள் வந்து குழுமினார்கள். பொன்னுலகில் இருந்து தாங்கள் கொணர்ந்திருந்த சிறந்த அணிமணிகளை நாயகத் திருமேனி அவர்கட்குச் சூடினார்கள். அழகிய ஆடைகளை அணிவித்தார்கள். வாசம் கமழுகின்ற மாலை தரித்திடவைத் தார்கள். ஒப்பனை செய்யப்பட்ட ஒட்டகத்தின் மீது ஏற்றினார் கள். வானுலகவாத்தியங்கள் ஆர்த்தன. வானமகளிர் வெண்சா மரம் வீசினர். கண்ணும் கருத்தும் களிப்புறநோக்கி மகிழ்ந்து, மக்கமாபுரத் தெருக்களினூடே உலாவாச்செய்தார்கள். அந்த ஊர்வலம் கதீஜாப் பிராட்டியார் தம்வீட்டின் வாயிலின் முன்பு வத்து நின்றது. நாயகம் அவர்கள் ஒட்டகத்தின் மீதிருந்து இறங்கினார்கள். இறங்கிய அவர்களின் பாதகமலங்களில்தாம் பணிவதாகக் கதீஜாப்பிராட்டியார் கனவு கண்டார்கள். விழித்துக் கொண்டார்கள். விழிப்பிலும் தரம் கண்டது கன வென்ற நினைவின்றி உண்மை நிகழ்வாகவே கருதி, தெருப் புறத்தே சென்று நோக்கினார்கள். தெரு வெறிச்சோடிக் கிடந்திடக் கண்டு துயரினில் ஆழ்ந்தார்கள். களவினை நனவென்று அகமகிழ்ந்து எழுந்து கதிர்மணி வாயிலை நோக்க இமைத கரியும் பரியோடு ரதமும் இருங்கடல் சேளையும் விருதும் மனமலர் உறைந்த முகம்மது தமையும் வானவர் மகளிர்கள் தமையும் புளைமணிக் கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார். . தாம் கண்டது கனவென்பது போய், திரும்பத் திரும்பு அக் காட்சியே தம்மனக் கண்முன் தோன்றத் துன்பம் மிகைத்து,
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/70
Appearance