84 84 என்பது உமறு தரும் பாட்டு. இன்னும், காவணத்தே கனிக் குலைகள் கட்டு வித்தைதயும், பந்தற்கால்கள் தோறும் வெள்ளிக் குடங்களை வைத்து, அவற்றில் தென்னம்பாளைகளை மடல் விரித்து வைத்திருந்த காட்சியையும்,அக்காட்சி, சூரியன் உதித்தெழுவதை ஒத்திருந்த தென்பதையும் வருணிக்கின்னர் புலவர் உமறு. பல்லியங்கள் ஆர்த்ததும், பன்மணி சூடியதும், பட்டாடை புனைந்ததும், பலவித மணப் பொருள்கள் நறுமணம் பரப் பியதும் நவிலப்படுகின்றன. நபிகள்நாயகம் அவர்கள் மணக்கோலம் பூண்டு, புரவி யின் மீது ஆரோகணித்து நகர்வலம் புறப்படுங்கால், ஏழை மக்களுக்கு உடையும் பொருளும் ஈந்து புறப்பட்ட விதம் இயம்பப்படுகின்றது. பின்னர், மறைவல்லார்களின் வாழ்த் தொலியுடன் நகர்வலம் ஆரம்பமாகின்றது. குதிரையின்மீது, முழுமதியென முகம் இலங்க, நபிகள் நாயகம் அவர்கள் மண மகனாக நகர்வலம் வருகின்ற காட்சியை, பேதை, பெதும்பை, மங்கை, கடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என் கின்ற ஏழுவகைப் பருவப் பெண்களும் தெருக்கள்தோறும் கூடி நின்று கண்டு களிக்கின்றனர். தமிழ்க் காப்பியங்களிலும், உலா நூல்களிலும் நகர்வலம் காண்கின்ற பெண்கள், தந்நிலை மறந்து, காமவயப்பட்டு, மோக மொழிகள் பகர்ந்து, உலாக் காணும் பாங்கை விரித்துரைக்கக் காண்கின்றோம். சீறாவில், உமறுப்புலவர், இந்த நிலையில் மாற்றம் கண்டுள்ளார். ஆம், நபிகள் நாயகம் அவர்களின் நகர்வலக் காட்சியைக் காணு கின்ற பெண்கள், 'இந்த அரியகாட்சியைக் காண நபிகள் நாயகம் அவர்களின் தாயார் ஆமினா இல்லையே' என அனு தாபப்படுகின்றனர். நபிகள் நாயகம் அவர்கள் சிறந்த அழ கென்றால், கதிஜாப் பிராட்டியும் அவர்களிலும் அழகென்கின் றனர். அழகும். அழகும் சேர்வது நிரப்பொருத்தம் என்றீ யம்புகின்றனர். அழகும் பணமும் வலியவந்து மாநபியைச் சேர்வதாக இயம்புகின்றனர். குதிரை சற்றே மெதுவாகச்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/85
Appearance