யான் 86 பாக்கியசாலிகள், வேறு எவருமே இல்லை என்ப் பெண்கள் வியந்துரைத்த பாங்கினை உரைப்பது, நாயகத்திருமேனி அவர்களின் நல்லெழிலைக்கண்டு, மேனி யில் பசலை பூத்துத்திகழ்கின்ற ஆசைவெறியுற்ற பெண்கள் பேச்சிலும் கூட, விரசவாடையில்லை. "இன்று நம்முடைய ஊரும், ஊரின் கண் உள்ள தெருக்களும் எவ்வளவு அழகுடை யனவாகத் திகழ்கின்றன? எனவே, என்றும் இப்படித் திகழ இது போன்ற பவனி தினமும் வரச் செய்யுமாறு கடவுளைத் துதித்து வேண்டுவோம் என்றே அவர்கள் பேசினராம். கனந்துதைந் தொதுங்குமாடக் கதிர்நிலா வீதிவாயிற் தினந்தொறும் பவனிகாாச் செய்தவம் செய்வோமென்பார். இவ்வரிகளில் வரும் கருத்து, பசலை பூத்த மேனிப் பாவையர் பகர்ந்தவை. இப்படி, கூடிநின்ற ஏழுவகைப் பருவப்பெண்களும் நபிகள் நாயகம் அவர்களையும் கதீஜாப் பிராட்டியாரையும் அவ்விருவர் தம் அழகையும் அரிய பேற்றையுமே புகழ்ந்து பாராட்டுவதைக் காண்கின்றோம். இது உலா வருணனையில் புதிய பாணி எனலாம். உமறுப் புலவர் காலத்திற்கு முன் இருந்தவர்கள் செய்த நூல் முறையில் இது சிறிது மாறு பட்டதே. இன்றையத் தமிழ் இலக்கிய வழக்கு இதனினும் மாறுபட்டதென்பதோடு, வேறுபட்டதென்றே கூறவேண்டும். இலக்கியத்தைக் காலக் கண்ணாடி என்பர். உமறுப் புலவர் வாழ்ந்த காலம் எத்தகைய தென்பதை இம்மாறுதல் கண் ணாடியாகிக் காட்சி படுத்தக் காண்கின்றோம். சீருப்புராணத்தில் வருகின்ற கதீஜாப் பிராட்டியார் திருமணக் காட்சியைக் கருத்தூன்றி நோக்குவோர், கதீஜாம் பிராட்டியாரின் திருமணத்தை, தமிழ்க் காப்பியத் திருமண மாக மட்டுமின்றி, தமிழ் நிலத் திருமணத்தை ஒத்திருப்பதாக வும் காணுவர், இது திருமணம் நிகழ்ந்த நிலப் பழக்க வழக் கங்களை வலியுறுத்தாமல், நூலினை நுகர்வோர் வாழுகின்ற நில வழக்கினை உரைத்து உய்த்துணரச் செய்து, ஒன்றி, ரசித்து
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/87
Appearance