97 ஆம், அவர்களின் முடிவு, சரி என்றேற்கும் வகையில் தான் அபூஜஹிலுடைய செயல்களும் அமைந்து திகழ காண்கின் றோம். அடலேறு ஹம்சா, நாயகத் திருமேனியாருடன் சேர்ந்து விட்டதினால், நாயகம் அவர்களின் கரம் வலுப் பெறுகின்றது என்பதைக் கண்ட அபுஜஹில், தனது ஆத்திரத்தை அதிக மாக்கிக் கொள்கின்றான். “விட்டேனா பார், இந்த முகம்மதை” என வீராப்புரைக்கின்றான். ஊரைத் தனக்கு உடந்தையாக்கிக் கொண்டு, முகம்மதைக் கொன்றொழிப்பேன் என கொக்கரிக் கின்றான். அவன் தன் சகாக்களைக் கூட்டி வைத்து, "உங்களில் யார் அந்த முகமதைக் கொல்லுபவர்? முகம்மதைக் கொன் றெழித்தென் முன் வருவோருக்குக் கொடுப்பேன் பரிசு, அளிப் பேன் அருநிதி" என ஆர்ப்பரிக்கின்றான். அவன் தன் ஆர்ப் பரிப்புடைய, ஆசைவார்த்தைகளைக் கேட்டு, யாரும் மயங்கி, நபிகள் நாயகம் அவர்களைக் கொலை புரியத் துணிந்து முன் வரவில்லை. "வீரத்தை நமது அரபிமண் இழந்து விட்டதா?” என அபுஜஹில் கேட்டதும், வீரத்தின் விளை நிலமாகிய உமறிப்னுகத்தாப் என்ற வாலிபர், எக்காளமிட்டுக் கொதித் தெழுந்தார். உமறிப்னுகத்தாப் வீரர் மட்டுமல்லர், விவேகி, கற்றுத் தேறிய இளைஞர். 'இவர் முகமதைக் கொன்றே ஒழிப்பார் இதில் ஐயமில்லை' என அவையினர் அனைவரும் நம்பினர். வாளேந்தி, அபூஜ ஹிலின் ஆசியுடன், நபிகள் நாயகம் அவர்கள் இருக்கும் இடம் தேடி வழி நடந்தார் உமறுகத்தாப். M உதிரம்சிந்திட முகம்மதின்உயிர்செகுத் தவர்க்கு, எள் பதியில்உற்றது எப்பொருள்உளது? அப்பொருள்பலவும் நிதியும்ஈகுவன், எனக்குஅரசுஎனவும் நிகழ்த்திடுவன் எதிரும்வீரர்களுன் சுவர்உளர்?லன எடுத்துஇசைத்தாள். இது, அபூஜஹிலின் உரை. ஆம், ஆசை காட்டி, வீரத்திற்கு விட்ட சவால் உரை. இவ்வுரை கேட்ட உயறுப்பினுகத்தாப். சீ.பு.6
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/98
Appearance