பக்கம்:சீவகன் கதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உண்மை வெளிப்படுதல்

                                          103


செய்து அவள் அரற்றுவதாய் இருந்தது அந்த அவலக் குரல். ஈண்டு அவள் இரங்குவதாகச் சில பாடல்களைத் தேவர் பாடுகின்றார். அவளது முன்னை வாழ்வையும் பின்பு சீவகனால் பெற இருந்த வாழ்வையும் காட்டிக் காட்டிச் சீவகன் நினைவால் அவள் நையும் திறம் நெஞ்சை உருக்குவதாகும்.

கோமான் மகனே! குருகுலத்தார் போரேறே!
ஏமாங் கதத்தார் இறைவா!என் இன்னுயிரே!
காமா! கடலுட் கலங்கவிழ்த்தேன் கண்ணுள்நீர்
பூமாண் புனைதாராய்! நோக்காது போதியோ?'(1805)

என்னும் பாடல் அவள் மனநலிவை விளக்கும் பாடல் களுள் ஒன்று. இவ்வாறு விசையை புலம்புவதைக் கண்ட தோழர் நால்வரும், ஒன்றும் புரியாராய், நெடிது நின்றனர்; பின்பு அவளைப் பலவாறு தேற்றிச் சீவகன் இறக்கவில்லையென்றும், பிழைத்திருக்கிறான் என்றும் கூறினர்; பின்பு அவன் பிழைத்த வழியையும் விஞ்சை யனால் தப்பிச்சென்று அப்போது ஏமமாபுரத்துத் தங்கி யிருத்தலையும் கூறினர்; மேலும், தாங்கள் அது வரை வணிகன் என நினைத்திருந்த சீவகன், அவன் செயலால் அரசனே ஆயினமையறிந்து மகிழ்வதாகவும் கூறினார்கள். பின்பு விசையையும் தன்னைப் பற்றியும் சீவகனைப் பற் றியும்கூறி, அவனை விரைவில் தன்னிடத்திற்கு அழைத் துவர வேண்டினாள். தோழர் நால்வரும் ஒரு திங்களில் சீவகனைத் தாயிடம் கொண்டு சேர்ப்பிப்பதாக களித்து அங்கிருந்து புறப்பட்டனர்.

புற நகரிலே:

தோழர் நால்வரும் காட்டிலிருந்து புறப்பட்டுப் பல காதம் கடந்து ஏமமாபுர எல்லையை அடைந்தனர்.சேனை யுடன் நால்வரும் அங்கு ஓடிய பரந்த ஆற்றினைக் கடந்து அழகிய சோலையில் தங்கினர்; அங்குத் தங்கி, 'இனிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/104&oldid=1484621" இலிருந்து மீள்விக்கப்பட்டது