பக்கம்:சீவகன் கதை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உண்மை வெளிப்படுதல்117

கொண்டு, தோழியர்களோடு தனது கன்னி மாடம் சென்று சேர்ந்தாள்.

சுரமஞ்சரியின் மணம்:

சீவகன் புத்திசேனனுடன் நண்பர்களை அடைந் தனன். அனைவரும் அவனைக் 'காமதிலகன்' எனப் புகழ்ந்தனர். நண்பருள் சிலர் சீவகன் விருப்பிற்கிணங்க அவள் தந்தையினிடத்துச் சீவகன்பொருட்டு மணம் பேசச் சென்றனர். அவள் தந்தையாகிய குபேரதத்தன் கேட்டு மகிழ்ந்தானாயினும், முடிபு காண முடியாது திகைத் தான். சீவகனுக்குப் பெண் கொடுத்தால் கட் டியங்காரன் சீற்றத்துக்குத் தான் உள்ளாக வேண்டும் என்று கரு னானோ, அன்றி ஏனோ, உடனே இசைவு தரவில்லை' தேவர் இம்மணத்தை மற்றைய மணங்கள் போலன்றி, அறத்தொடு நிற்கும் முறையில் முடிக்க நினைக்கின்றார். மகள் மனம் அறியாத தந்தை மறுக்கவும் மாட்டானாய் இசையவும் மாட்டானாய் இருப்பதைச் சுரமஞ்சரி அறிந் தாள்; உடனே தானும் சீவகனும் கொண்ட காதலைக் கூறித் தோழிக்கு அறத்தொடு நின்றாள். தோழி செவி லிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் குபேரமித்திர னுக்கும் அறத்தொடு நிற்க, மகள் கருத்தறிந்த நாய்க னும் இசைந்தான். அடுத்த நன்னாளில் சுரமஞ்சரியைக் குபேரதத்தன் சீவகனுக்கு உரியவளாக்கினான்.

பின்பு சீவகனும் சுரமஞ்சரியும் இன்பக் கடலுள் ஆழ்ந்தனர். தேவர் எங்கும் இன்பத்துறையை எடுத் துக் காட்டுவது போன்று இங்கும் அவர்கள் னப வாழ்வைப் பல பாடல்களால் பாராட்டுகின்றார். அவர் தம் ஊட லும் கூடலும் உணர்ந்து பயில்வார்க்கு இன்பம் பயப்பனவாகும். சுரமஞ்சரியோடு ஊடியும் கூடியும் இன்பம் துய்த்த சீவகன், தன் பிரிவை உணர்த்திச் சில காலம் அவள் தனிமையில் இருக்க வேண்டுவதைக்கூறினான். அவளும் அவன் நலமே தன் நலமென்று கொண்ட கொள்கையை 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/118&oldid=1484109" இலிருந்து மீள்விக்கப்பட்டது