பக்கம்:சீவகன் கதை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

124

               சீவகன் கதை

இறந்தான் என்று எண்ணியிருந்த கட்டியங்காரனுக்கு அவனைக் கண்டதும் சீற்றம் பிறந்தது. சீவகன் வேறு ஒன்றையும் கருதானாய், அத்திரிபன்றி எய்யும் வழியை எண்ணி ஆராய்ந்து, அதை வீழ்த்தி வெற்றி கண்டான். அவன் வெற்றியைத் தேவர்,

அருந்தவக் கிழமை போல இறாதவில் அறாத நாண்வாய்த் திருந்தினர் சிந்தை போலும் திண்சரம் சுருக்கி மாறாய் இருந்தவன் பொறியும் பன்றி ஒருங்குடன் உதிர எய்தான் இயற்றரும் பொறியும் அற்றாங்கு ஊழித்தீ உருமொ டொப்பான். (2204) என்று பாராட்டுகின்றார். மன்னர் மருண்டனர். கட்டி யங்காரன் மிகச் சினந்தான். அப்போது கோவிந்தராசன், சீவகன் சச்சந்தன் மகன் என்பதையும் பகை முடிக்கக் காலம் பார்த்திருந்தான் என்பதையும் விளங்க உரைத் தான். அதே வேளையில் வானிடைச் 'சீவகன் என்னும் சிங்கம் கட்டியங்காரன் என்னும் வேழத்தின் உயிரைக் குடிக்கும்!' என்ற ஒலி எழுந்தது. அனைவரும் துணுக் குற்றனர். மறத்தின் முறிவு :

அனைத்தும் கண்ட கட்டியங்காரன் சீறி எழுந்தான்; தன்னை வஞ்சனையாக அழைத்து வந்து கொல்ல நினைத்த மாமனையும் மருமகனையும் வைதான்; தன் ஆற்றலைச் சச் சந்தன் அறிவான் என்றும், மகன் சீவகன் அறியான் என்றும் கூறினான். வஞ்சித்த இருவரையும் அப்போதே கொல்வதாகக் கூறிப் போர் தொடங்கினான். பலர் அவன் பக்கம் சேர்ந்தனர்; அவன் மைந்தர் நூற்று வரும் துணை நின்றனர். விரைந்து பகை முடிக்கப் போர் முரசார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/125&oldid=1484617" இலிருந்து மீள்விக்கப்பட்டது