பக்கம்:சீவகன் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 சீவகன் கதை டை கனத்து, வருகின்ற கதிருக்கு வழி விட்டது. கதிர் ளம்பசுமையில் தலை தூக்கியிருந்தது; பின்பு முற்றித் தலை சாய்ந்தது. இக்காட்சிகளை வைத்துத் தேவர் உலகுக்கு நல்ல உணமையை எ டுத்தோதினார். செல்வம் பெற்ற அற்பர்தம் வணங்காமுடி போலப் பச் சைக் கதிர்களும், கற்றறிந்த விற்பனர் மற்றவர்களுக்குத் தலை தாழ்த்தல் போல முற்றிய க கதிர்களும் காட்சி அளித்தன என்பது அவர் கண்ட உண்மை. அத்துடன் கருவுற்ற பயிர் கருவுற்ற பசும் பாம்பினை ஒத்ததையும் காட்டுகிறார்: 'சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.' (53) என்பது அவர்வாக்கு. இவ்வாறு உயர்ந்த அறநெறியின் உண்மைகளை எளிய காட்சிப் பொருள்களைக்கொண்டே விளக்கும் அறிவுடைமை, தேவர் போன்றார்க்கே ஏற் புடை த்தாகும். விளைந்த விளைச்சலை உழவரும் உழத்தியரும் கொய்து வந்து களத்திடைச் சேர்த்தனர். பின்னர் அவ்விளை பொருள்கள் உரிய இடங்களைச் சென்று அடைந்தன. நெல் மட்டுமன்றி, ன்னும் எத்துணையோ விளை பொருள்கள் இவ்வாறு ஏமாங்கத நாடு முழுதும் நன்கு பயிர் செய்யப்பட்டன. இப்படித் தம் கை வருந்தப் பாடு பட்ட மக்கள், பெற்ற பயனைக் கொண்டு சுற்றம் அருத்தித் தாங்களும் உண்டு, விழாவும் சிறப்பும் கொண்டாடி, ஆண்டு முழுதும் இன்புற்றிருந்தார்கள். ஆடவரும் மக ளிரும் அழகாகச் சோலைகளில் மகிழ்ந்தும் வாவிகளில் ஆடியும் பிற வகையில் இன்பம் துய்த்தும் காலம் கழித் அவர்தம் செல்வமிகுதியைக் குறிக்க ஒன்று காணல் பொருந்துவதாகும்: தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/13&oldid=1484478" இலிருந்து மீள்விக்கப்பட்டது