பக்கம்:சீவகன் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும் 13 நீலமலரை ஒத்த கண்களையுடைய மகளிர் சோலை யில் உள்ள வாவியில் நீராடினர். அவர்கள் நீராடும் போது இடையிற்கட்டிய மேகலைகள் சரிந்தும் நெகிழ்ந்தும் அறுந்தும் சிதறின. நீராடும் மகளிர் அவற்றைப் பற்றிக் கவலையுறாது திளைத்தனர். அம்மேகலைகளின் மணிகளைப் பொறுக்குவாரிலர். அவை நீர் முழுதும் நிறைந்தன. அக்காட்சி வானிலே பல மீன்கள் ஒளி வீசும் நிலையினை ஒத்திருந்தது. இன்னும் இது போன்ற காட்சிகள் எத் தனையோ நம் கண்முன் தோன்றுகின்றன. அவற்றை யெல்லாம் கண்டுகொண்டே சென்றால், தலை நகருக்குச் செல்வதற்கு நாள் பல ஆகிவிடும். எனவே, அந்நாட்டு நலத்தினை இந்த அளவோடு நிறுத்தி, அப்பொன்னான நன்னாட்டுத் தலைநகரினுள் புகுந்து, அங்குள்ள பல்வேறு அணி நலன்களையும் அரசிருக்கை முதலியவற்றையும் காணலாம். சீவகன் தந்தை சச்சந்தன் அமர்ந்து ஆட்சி செய் கின்ற நகரம்- ஏமாங்கத நாட்டுத் தலைநகர் -இராசமாபுரம் என்பதாகும். இராசமாபுரத்து எழில்: நக நாட்டு வளத்தையெல்லாம் கண்டுகொண்டே ரின் எல்லையை அடையின், அவ்வெல்லையிலேயே தலை நகரின் சிறப்பு நன்கு விளங்கும். நகருக்கு வெளியிலே அதைச்சுற்றி மதிலும் அகழியும் சிறந்த அரணாய் அமைந்துள்ளன. அகழியில் வீழ்ந்தவர் தப்பிப் பிழைத் தல் அரி தாகும். அவ்வக ழியில் மலர்கள் நிறைந்து மணம் வீசின. காவலர் அகழியை நன்கு பாதுகாத்தனர். இத்தகைய காவல் மிகுந்த அகழியை ஒட்டி உயர்ந்த மதில் ஓங்கியிருந்தது. அப்பெருமதில் நீர் சுமந்து இளைத்த மேகத்தைத் தன்னிடத்தே அணைத்திருக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/14&oldid=1484487" இலிருந்து மீள்விக்கப்பட்டது