பக்கம்:சீவகன் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 சீவகன் கதை காரணத்தாலே குழவியை ணைத்த தாயின் தனத் தைப் போலவும், அம்மேகம் உரசிச் செல்கின்ற பெரிய மலையைப்போலவும் விளங்கிற்று. அவ்வழகிய மதிலின் உட்புறத்தே விளங்குவது இராசமாபுரம். மதிலைத் தாண்டி மாநகரின் உட்புகின், தெருவு தொறும் நடைபெறும் சிறப்பும் பிற காட்சிகளும் கண்ணை யும் கருத்தையும் கவர்வனவாய் அமைகின்றன. அந் நகரத்தே பல்வேறு பணிகளைப் புரியும் மக்களும் மாக் களும் கூட்டங்கூட்டமாய் இருந்து பெருத்த ஆரவாரத் தோடு தொழிலாற்றுகின்றார்கள். உயர்ந்த மாளிகைகள் ஒழுங்குபட அமைக்கப்பெற்று அழகொடு சிறந்து விளங்குகின்றன. தேரோடும் திருவீதிகளும், தேர்கள் தங்குமிடங்களும், குதிரைப் படைகளும் யானைப் படை களும் தங்கும் இடங்களும், வீரர்கள் வாள் தொழில் முத லிய படைக்கலப் பயிற்சி பெறும் இடங்களும் ஊரைச் சுற்றிப் புற நகரிலே ஒப்பற்று விளக்கமுறு கின் றன. தெருத்தொறும் மகளிர் மங்கலச் சிறப்பெடுத்தனர்; கோலமிட்டு அழகு செய்தனர்; பல நிற நீர்களைத் துருத்தி களில் நிரப்பித் தெருவிடைச் சிந்தினர். அந்நீருள் சிந் தூரப் பொடிகளும் பொற்சுண்ணங்களும் நிறைந்திருந் தன. அந்த நீரில் காலைக் கதிரவன் ஒளி பட்டுச் செல் லும் போது தோன்றும் நிறங்கள் அங்கு ஏழு நிறங் களோடு கூடிய வான வில்லே வட்டமிடுவது போன்று விளக்கமுற்றன. எனவே, இராசமாபுரத்துத் தெருக்களே இந்திர வில்லாயின. பதினெண் வகையான மொழிகளைப் பேசும் மக்கள் அத்தெருக்களில் எள் விழ இடமில்லா வகையில் நெருக்கிக்கொண்டிருந்தார்கள். தருக் அங்காடித் தெருவும் அதை அடுத்த பல களும் அழகாக விளக்கிக் கூறப்படுகின்றன. அப்பெரு நகரில் பலப்பல தெருக்கள் பலப்பல வகையாக அழகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/15&oldid=1484652" இலிருந்து மீள்விக்கப்பட்டது