பக்கம்:சீவகன் கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 நாய்க்கு மந்திரம் : சீவகன் கதை அந்த விளையாட்டு மகிழ்ச்சியில் எல்லா வருணத் தாரும் கலந்துகொண்டனர். அந்தணரும் பிறரும் வந்து விழாவில் கலந்து மகிழ்ந்தனர். அந்தணர்களுக்கெனத் தனியாக ஒருசார் உணவு சமைத்திருந்தது போலும்! அதை ஒரு நாய் சென்று உண்டது. கண்ட அந்தணர் வெகுண்டனர்; நாயை நன்கு புடைத்தனர். நாய் அதை ஆற்றாது எதிரே இருந்த பெருந்தடாகத்துப் பாய்ந்தது. அங்கும் அதனை விடாத மூர்க்கர், கொன்று போட முயன். றனர். அதே வேளையில் அந்நாய்க்கு உரிய கல்லாக் களிமகன் ஒருவன் தன் காதலியோடு அங்கு வந்து தன் நாயைக் கொன்றவரைப் பழி தீர்ப்பதாக வஞ்சினம் உரைத்தான். அந்தணர் செய்வதறியாது திகைத்தனர். அந்த வேளையில் சீவகன் அங்குத் தானே வலியச் சென்று, அவர்தம் மாறுபாட்டை அறிந்து, இருவரை யும் விலக்கி அப்புறப்படுத்தினான். இருவரும் அகன்ற னர். பின்பு சீவகன் அந்த நாய் இருந்த இடம் சென்று அதன் நிலை கண்டு நைந்தனன்; அதன் உள்ளத்தே மறமின்மை அறிந்தான். இறந்தாற்போல வருந்திய அதனை உயர்த்தக் கருதிய சீவகன், அதன் காதில் செல்கதிக்கு நலம் பயக்கும் ஐந்து மந்திரத்தையும் உப தேசித்தான். உபதேசித்த அளவிலே நாயின் உருக்காண வில்லை. தூரத்தே மலை உச்சியில் ஒப்பற்ற தேவபுருடன் தோன்றினான்.அவன் நிலையையும் தனக்கு அந்நிலையைத் த்தந்த சீவகன் நிலையையும் சிந்தித்தான்; சிந்தித் துச் சிவகன் முன் வந்தான். ே தடி எதிரே வந்து நின்ற அமரனை நோக்கி, 'நீ யார்?' என்றான் சீவகன். சுதஞ்சணன் என்னும் அவ்வித்தியா தரன், தானே நாயாகியிருந்து சீவகன் உரைத்த மந்திரத் தால் அத்தேவ யாக்கை பெற்றவன் என்றும், தன், நாடு" சங்கவெண்மலை என்றும், நகர் சந்திரோதயம் என்றும் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/69&oldid=1483820" இலிருந்து மீள்விக்கப்பட்டது