பக்கம்:சீவகன் கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசமாபுரத்தே 69 னான்; மேலும், சீவகனுக்கு ஏதேனும் தேவையாயின் வேண்டுவதைச் செய்து சொன்னான். சீவக தருவதாகவும் (50), தனக்கு அப்போது ஒன்றும் தேவையில்லை என்றும்,வேண்டும் காலத்து நினைப்பதாகவும் கூறினான். சுதஞ்சணனும் அவனை விட்டுப் பிரியாது நிழல் போலப் பற்றியிருப்பதாகக் கூறி விடை பெற்று மறைந்தான். 6 நாய் தேவர் இந்நிலையை எண்ணிப் பார்க்கின்றார். விஞ்சையனாவதா?' என்ற கேள்வி பிறக்கிறது; ஏன் ஆகாது ?' என்ற மறு கேள்வியும் பிறக்கிறது; காய்ச்சிய கடின இரும்பு பச்சிலை வயத்தால் பொன்னாகும் காட்சி மனக்கண் முன் வருகின்றது. தேவர் அனைத்தையும் எண் ணித் தாழ்ந்தவர் உயர்வர் என்ற முடிவுக்கு வருகின்ற னர். நல்ல உளமும் அறிவும் பெற்றவர்தம் உணர் வா லும் ஆசியினாலும் தாழ்ந்தோர் உயர்வர், இரும்பு பொன் னாதல் போல,' என்று பேசுகிறது அவர் வாய். இதோ அவர் பாடல்: 6 'சொல்லிய நன்மை யில்லாச் சுணங்கன்இவ் வுடம்பு நீங்கி எல்லொளித் தேவ னுகிப் பிறக்குமோ?' என்ன வெண்டா; கொல்லுலை யகத்திட்டு ஊதிக் கூர்இரும்பு இரதம் குத்த எல்லையில் செம்பொன் ஆகி எரிநிறம் பெற்ற தன்றே?' யானையால் வந்த வினை : (960) சுதஞ்சணனை இயக்கனாக்கிய பின் சீவகன் தன் தோழர்களோடு இருந்த அதே வேளையில், அவ்வளமார் சோலையில், பொழில் விளையாட்டயர்ந்தனர் நகர மாந்தர். எங்கும் மங்கல ஓசை எழுந்தது. வசந்த விழாச் சிறப்புற நடைபெற்றது. ஆடவரும் பெண்டிரும் அணி அணி யாய்ப் புனலாடியும் சோலையிற்றங்கியும் மகிழ்ந்த சிறப் பினைப் பல வகையில் பாராட்டுகின்றார் தேவர். சாந்தும், மலரும், துகிலும், அணியும் மகளிருக்கும் மைந்தருக்கும் இடையிடையே மாறி மாறி இடம் பெற்றுச் சிறந்தன. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/70&oldid=1484497" இலிருந்து மீள்விக்கப்பட்டது