பக்கம்:சீவகன் கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. சீவகன் கதை இப்பொழில் விளையாட்டுப் பகுதி, பிற்காலப் புலவர் பலர்க்கு விருந்தாயமைந்துள்ளது. அவ காதலர் மட்டுமன்றிக் கன்னியரும் காளையருங்கூட இப்பொழில் விளையாட்டில் கலந்துகொண்டனர். ருள் ஒருத்தியே குணமாலை. இப்பொழில் விளையாட் டைக் கண்டு வீடு திரும்பினாள் அவள். அவள் வரும் வழியில் அரசனது பட்டத்து யானை மதம் பிடித்த நிலை யில் அடங்காது தெருவில் வீறிட்டு வந்தது. குணமாலை யின் பல்லக்கினைச் சுமந்தார், அஞ்சி அப்பல்லக்கை நடுத் தெருவில் விட்டு மறைந்தனர். குணமாலையும் அவள் தோழியும் தனித்து நின்றனர். யானை அவர்களை நெருங்கி வந்தது. அவள் தோழி, 'ஆடவரில்லையோ!' என்று அரற்றினாள். அவளை நோக்கி வரும் யானையின் நிலை அவளை நோக்கிச் செல்லும் காமுகர் உள்ளத்தைத் தேவ ருக்கு நினைப்பூட்டிற்றுப் போலும்! அவர், 6

  • கருந்தடங் கண்ணி தன்மேல் காமுகர் உள்ளம் போ இருங்களி றெய்த லோடச் சிவிகைவிட் டிளையர் ஏக அரும்பெற லவட்குத் தோழி, 'ஆடவ ரில்லை யோ!'என்று ஒருங்குகை உச்சிக் கூப்பிக் களிறெதிர் இறைஞ்சி நின்றாள்.' (975) என்று பாடுகிறார். ஆம்; தோழி உயிர்த்தோழியாவாள். எனவே, தான் குணமாலைக்கு முன் நின்றால் தன்னை யானை அழித்துக் குணமாலையை அணுகுமுன் யாரேனும் ஆடவர் வந்து அவளைக் காப்பர் என நினைத்தாள் அவள். அவள் நினைப்பு வீண் போகவில்லை. அவளுக்கும் தீங்கு நேராதபடி அங்கே எதிர்ப்பட்டு ஒரு காளை அவர்களைக் காத்தான். அவ்வீரன் சீவகனேயாவன். தரு வ வழியே வீடு திரும்பிய சீவகன், அச்செயல் கண்டு- விரைந்து, அந்த யானையின் வேகத்தையும் வெறியையும் அடக்கி, அம்மகளிரைக் காத்தான். ஆனால், அச்செயலால் இரு வேறு வினைகள் அவனுக்கு நேர்ந்தன: ஒன்று,அவனும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/71&oldid=1484623" இலிருந்து மீள்விக்கப்பட்டது