பக்கம்:சீவகன் கதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இராசமாபுரத்தே

77

தத்தை, 'ஆயினும் ஆக; எப்படியும் காத்தலே கடன்,' என்று கருதித் தெய்வங்களுக்கு ஆணையிட்டாள். ஆனா லும், அதற்கு முன்பே சீவகன் தன் மனைவியால் மீட்கப் பட்டான் என்ற மாசு உண்டாகா வண்ணம் தன்னைக் காத்துக்கொண்டான். எப்படி?

நண்பர் தம் செயலையும் மனைவியின் வினையையும் எவ் வாறோ அறிந்த சீவகன், அவற்றால் தான் விடுதலை பெறல் இழுக்கே என நினைத்தான்; தன் நண்பனாகிய சுதஞ்சணனை நினைந்தான். தன் காதலியரோடு களியாட் டயர்ந்திருந்த சுதஞ்சணனது இடக்கண்ணும் இடத்தோ ளும் துடித்தன. தன் நண்பன் சீவகனுக்கு உண்டான துன்பத்தை அவன் உற்று அறிந்தான்; உடனே இராச மாபுரம் அடைந்தான்; பெருங்காற்றையும் மழையையும் உண்டாக்கினான். வழி துறை தெரியாதபடி வானமுகடு இருண்டது. சீவகனை அழைத்துச் சென்ற சேனை சித றிற்று. சுதஞ்சணன் தாழ்ந்து வந்து, தன் நண்பனைத் தழுவி, அப்படியே தூக்கிக்கொண்டு வான் வழியே பறந்து சென்றான்.

மதனன் செயல்: சிறிது நேரத்தில் வானம் வெளுத்தது.வையம் உணர்ந்தது. மதனன் சீவகனைக் காணாது வருந்தினான்; அவனைக் கொண்டுவரச் சொன்ன தன் மைத்துனன் கட் டியங்காரனுக்குக் கூறுவது அறியாது திகைத்தான். திகைப்பின் முடிவிலே ஓர் எண்ணம் எழுந்தது. ஆம். அங்குக் கேட்பாரற்றுக் கிடந்த ஒருவனைச் சின்ன பின்ன மாக்கிக் கொன்று, உருத்தெரியாமற்செய்து, அவனுட லைக் கட்டியங்காரனுக்குக் காட்டி, 'வரும் வழியில் காற் றும் மழையும் கலந்தமையால், அவ்வேளையில் தப்பிச் செல்ல வழி பார்த்த சீவகனை வேறு வகையின்றிக் கொன்று வந்தோம்,' என்று கூறினான். அதைக் கேட்ட கட்டியங்காரனும் நம்பிவிட்டாள்; தன் பகைவன் செத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/78&oldid=1484454" இலிருந்து மீள்விக்கப்பட்டது