பக்கம்:சீவகன் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சீவகன் கதை


8

'இன்பச்சுவைபில் வெறுப்புற்றமைதான் பாடாமைக்குக் காரணமேயன்றித் தெரியாமை காரண மன்று,'என்றார். மற்றவர், 'அப்படியாயின், நீங்களே காமச் சுவை தோன்றக் காவியம் பாடுங்கள்,' என்றனர்.

அறிஞர் கூறிய மொழியை மறுக்க மாட்டாராய்க் காதற்சுவை நிரம்பிய காவியம் பாட இசைந்தார் தேவர்; தம் ஆசிரியரிடம் நடந்ததைக் கூறினார். ஆசிரியர் இவர் தம் புலமையையும் திறமையையும் நன்கு அறிவர்.எனினும், இவர்தம் கருத்தை மேலும் அறிய அப்போது அங்கு ஓடிய நரியினைக் கண்டு, அது பற்றி ஒரு நூல் பாடும்படி கூறினார். தேவர் சிறிதும் தயங்காது, நரியையே ஆதாரமாகக் கொண்டு, அறம் முதலிய உண்மைகளும் துறவு நெறியும் விளங்குமாறு 'நரிவிருத்தம்' என்னும் அழகிய நூலைப் பாடிமுடித்தார். தம் மாணவரின் மதி நுட்பத் தையும், துறவு நெறியில் நின்ற திட்பத்தையும் அறிந்த ஆசிரியர், 'இனபச்சுவை மிக்க சீவகன் சரிதையைக் காப்பியமாக்குக,' என்றனர்; அதற்குத் தாமே முதலாவதாகச் ‘செம்பொன் வசைமேல்' என்ற பாட்டை அருகக்கடவுள் வணக்கமாகப் பாடிக் கொடுத்தனர்.

ஆசிரியர் அருள் வழித் தேவர், மூவா முதலா' என்ற முதற்பாட்டைப் பாடினர். ஆசிரியர், தம் பாட்டினும் அது சிறந்ததாய் அமைந்தமையின், அதையே முதலாவதாக அமைத்து நூல் இயற்ற வேண்டினார். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் தொடர்ந்து எழுதப் பெற்றது. புலவர் அவையில் தம் நூலைத் தேவர் அரங்கேற்றினர். கேட்டவர் மகிழ்ந்து, 'அரிது அரிது!' என ஆரவாரித்தனர்.

எனினும், சிலர் தேவரை ஐயுற்றனர். இத்துணைக் காமச்செறிவோடு கூடிய காப்பியம் பாட வேண்டுமாயின் ஆசிரியர் சிற்றின்பத்தில் ஆழ்ந்தவராகவோ வேண்டுமென்பது அவர்தம் கூற்று. தூய துறவுள்லெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/9&oldid=1484177" இலிருந்து மீள்விக்கப்பட்டது