பக்கம்:சீவகன் கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பிறப்பும் வளர்ச்சியும்

                                          7

ஒட்டி ஓர் இருண்ட காலம் ஏற்பட்டதை வரலாற்று ஆசிரியர் நன்கு உணர்வர். அவ்விருண்ட காலம் திரும்பவும் ஒளி மிக்க காலமாக மாற வழி காட்டியாய் உள்ளவற்றுள் சிந்தாமணி சிறந்த விளக்கமாய் அமைந் தது. தாழ்ந்த தமிழர் வாழ்வைத் தலை தூக்க வைத்த பெருமை சிந்தாமணிக்கே உரித்து. இனி இத்தகைய பெருங்காப்பியக் கடலுள் திளைத்து மகிழுமுன் இந்த மங்கா விளக்கை ஏற்றித் தமிழன்னையை வாழவைத்த அந்தத் திருத்தக்கதேவரைப்பற்றி ஒரு சில அறிந்து, பின் மேலே செல்லலாம்:

தேவர்:

சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர். தேவா என்றே சிறப்பாக இவர் வழங்கப் பெறுவர். இவர் சோழ அரசர் குடியில் தோன்றிய செம்மலார்; இளமையிலேயே தமிழிலும் வடமொழியிலும் வல்லவராய் விளங்கியவர்; சமண சமயத்தைச் சார்ந்தவர்; அச்சமய நூல்களை ஐயந் திரிபறக் கற்று உணர்ந்தவர்; இளமையிலேயே துற வொழுக்கத்தை மேற்கொண்ட தூயர்; தம் ஆசிரியர்பால் நீங்கா நேயம் பூண்டவர்; ஆசிரியருடனே அவர் வழிச் சென்று, செல்லுமிடமெல்லாம் நல்லறம் வளர்க்கும் வழியில் அரும்பணி செய்தவர்.

ஒருகால் தேவர் தம் ஆசிரியருடன் மதுரை நகர் சேர்ந்தார்; தமிழ் வளர்ந்த அத்தலைநகரில் இருந்த பிற்காலச் சங்கப் புலவர்களோடு கலந்து பழக விரும்பினார்; ஆசிரியர் நல்லாசியுடன் அவர்களோடு பழகி, அறிவன அறிந்து, அவர்களுக்கும் உணர்த்துவன உணர்த்தினார். அவர்கள் அவ்வாறு பழகுங்கால் ஒரு நாள் சமணத் துறவியர் பற்றிப் பேச்செழுந்தது. அத்துறவியர் அவர் தம் அறநெறியினைப் பாடுவாரல்லது, காதற்சுவைபடப் பெறவல்லவரல்லர் என்றனர் சிலர். அதற்குத் தேவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/8&oldid=1484182" இலிருந்து மீள்விக்கப்பட்டது