பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. முத்தியிலம்பகம் முத்தியிலம்பகம் : சீவகனது ஆட்சிக்காலத்தில், அவன் தாயான விசயை தண்டாரணியத்துத் தவப்பள்ளியிலிருந்து துணே செய்து போந்த தாபக மகளிர்க்குத் தான் அருகன் கோயிலொன்று 'எடுப்பித்து நல்ல பூசனை செய்து, அதன் பயனே கல்கினள் : சுடு காட்டில் தனக்குத் தோழியர்ய் வந்து துைேபுரிந்த தெய்வத்துக் கும் ஒரு கோயில் சமைப்பித்தாள் ; சுடுகாட்டை அறக்கோட்ட மாக்கி நாடோறும் ஐந்நூற்றைந்து பிள்ளைகட்குப் பாலும் சோறும் அளிக்குமாறு செய்தாள். தான் உறையுமிடத்தே மயிற்பொறி யின் வடிவமெழுதி மனம் மகிழ்ந்தாள். முடிவில், அவள் துறவு பூணற்கெண்ணி, சீவகன்பால் விடை பெற்றுப் பம்மை யென் லும் அடிகளை யடைந்து, துறவறம் மேற்கொண்டாள். சின்னுள் கழிந்ததும்,சீவகன் தன் மனைவியருடன் துறவியாகியவிசயையைக் கண்டு பணிந்து தன் நகரம் போந்து, சோல்ே நுகர்வு, நீர் விளே யாட்டு முதலிய பல இன்பத் துறைகளில் எளியனப் இனிகிருந்து வந்தான். அவன் மனேவியரும் முறையே சச்சந்தன், சுதஞ் சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிங் தன் என்ற மக்களைப் பெற்று மகிழ்ச்சி மிகுந்தனர்.) : மேலே கூறியவாறு சீவகன் இனிதே நாடாட்சி செய்து வரும் நாளில் விசயை அவனே, அருகனுக்கு மிகச் சிரிய தொரு கோயிலே எடுக்குமாறு பணிக்க, அவனும் அத்தகைய ,கோயில்ொன்றை எடுப்பித்தான். - - அருகன் கோயிற் சிறப்பு விண்பாற் சுடர்விலக்கி மேகம் போழ்ங்து விசும்பேக்தி மண்பாற் றிலகமாய் வான் பூத் தாங்கு மணிமல்கிப் பண்பால் வரிவண்டுங் தேனும் பாடும் பொழிற்பிண்டி எண்பால்’இகந்துயர்ந்தாற் கிசைந்த கோயி வியன்றதே. சுசுஎ. விண்பால் சுடர் - விண்ணில் உள்ள் ஞாயிறும் திங்களும், விசும்பேக்தி - தேவருலகுக்கு மேலாய். மண் பால் - மண்ணிலுள்ள கோயில் களுக்கு. வான் பூத்தாங்கு - வானம் மீன்பூத்தாற்போல, மல்கி - நிறைய விருத்தலால், மேகம் போழ்த்து. சுடர் விலக்கி, பூத்தாங்கு மல்குதலால், விசும்பேக்தி, திலகமாய் இயன்றது என்க. பண்பால் . பண்பாடும் பான்மையுடைய, எண்பால் இகங்து உயர்ந்தாற்கு எண் குணங்களால் உயர்ந்த அருகனுக்கு.