பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 127 அடிப்பதனாலோ, கல்லை எடுத்து ஒட்டின் மேலே வீசுவது. னாலோ ஒலி எழுகிறபோது- - இவ்வாறு, இயல்புக்கு விரோதமான ஓசைகள் அலை மோதும்போதெல்லாம், அவன் உள்ளத்தில் பெரும் பயம் தாக்கியது. உடல் நடுங்கியது. அவன் கண்கள் வீட்டினுள் முட்டி மோதி, மோட்டை எட்டிப் பிடித்து, சுழன்று தவித்து, முடிவில் அவள்மீது படிந்தது. அவள் ஒரு மூலையில் குறுகுறு வென்று குந்தியிருந்தான். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருத் தாள், பயம் எனும் பண்பின் பரிணாமமாகக் காட்சி அளித்த அவளுடைய கண்கள் திகிலுற்ற சிறு பிராணியின் கண்களைப் போலவே மிதந்து புரண்டு கொண்டிருந்தன. வெளியே திம் திம் என்று சத்தம் எழுகிறபோது அவள் தேகம் பதறியது. அச்சமயத்தில் அவள், உதறலெடுத்து ஒடுங்கி நிற்கும் முகல் குட்டி மாதிரியே காணப்படுவாள். தனது கணவனோடு ஒண்டி இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும்.என அவள் எண்ணியது உண்டு. ஆரம்பத்தில் அவள் அப்படிச் செய்த போது, பயத்தினால் நடுங்கிக்கொண்டிருந்த அவன் சிறி விழுந்தான். தான் பயப்படாமல் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்குப் பாடுபட்டான் அவன். “சீ, என்ன இது சும்மா சும்மா இடிச்சுக்கிட்டு அப்படி. என்ன பயம் இப்ப? கத்த வெருவுணி ஆக இருக்கியே. போயி அந்த மூலையிலே கிட!” என்று அவன் சிடுசிடுத்தான். அவனுக்கும் பயம்தான் என்பதை அவள் அறியாமல் இல்லை. அவனுடைய பார்வையே அதைக் காட்டிவிட்டதே! அதனால்தான். அவன் அவள் பக்கம் பார்வை எறிவதற்குக் கூசினான். ஆயினும், அவளைப் பாராமல் இருக்கவும் இயல வில்லை. ஒரே அறையில் கிடந்து ஒரே விதமான உணர்வு: