பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் ) 11 அதுவரை கில்லன் கட்டும் வேலை நிறுத்தப்பட்டது. பம்பாயில், வேறு சில இடங்களில், இது போன்ற சிமிண்ட் ஆலைகளில், புகை மேலே போவதில்லை. பூமிக்குக் கீழேயே கொண்டுபோய், குளிரவைத்து, சிமிண்ட் துணை சேகரம் செய்வதற்குக்கூட வசதியான ஏற்பாடுகள் இயந்தி’ உதவியால் செய்யப்பட்டுள்ளன. அதுபோல் இங்கும் அமைக்க வேண்டும். . • r இப்படி ஒரு யோசனை. நிபுணர் வந்த்ார்; பார்த்தார்; போனார், என்னென்னவோ பிளான்கள்; ஏதேதோ பேச்சுகள். பிறந்தன. தேய்ந்தன. ஒடுங்கின. . - இதற்கெல்லாம் பெரும் பணம் பிடிக்கும். பூமிக்கு அடியில் கட்டிடம் அமைக்கவும், புகையைத் திருப்பிவிடும் இயந்திரங்கள் வாங்கவும், ஆவன செய்யவும் எவ்வளவோ பணம் செலவு செய்தாக வேண்டும். . - தொழில் அதிபர்கள் மத்தியில் குழப்பம், கவலை பெருமூச்சு. அவர்கள் உள்ளத்தில் இருட்டு, 率 淡 密 இருட்டிலே திருட்டுத்தனமாக எவ்வளவோ காரியங்கள் நடைபெறுகின்றன: பணம் படைத்தவர்கள் சுயநலத்துக்காக ஒரளவு பணத்தை தாராளமாக-இருட்டிலும் வெளிச்சத்திலும்சதிராடவிடத் தயங்குவதில்லை. சக்திமிக்க சதிராட்டம் எவரையும் உலுக்கிவிடும். ஐயமில்லை. பணம் பெரும் சக்திவாய்ந்தது