பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 (; வல்லிக்கண்ணன் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்; அதை நினைக்கவும்: அவளுடைய உடல் நடுங்கியது. இதயம் திக்திக்கென்று அடித்துக்கொண்டது. 'நல்ல வேளை: தெய்வம்தான் அந்த நேரத்திலே அவரை அங்கே கொண்டு வந்து விட்டிருக்கணும் என்று அவள் எண்ணினாள். அவரு நல்லவருதான் என்று நன்றி யுடன் நினைத்துக் கொண்டாள். வீட்டினுள்ளிருந்து அவளை இழுத்து வந்து இருட்டில் எங்கெங்கோ அவன் அலைய வைத்தபோது செல்லம்மா அவனைப்பற் தி மோசமாகத் தான் எண்ணினாள். முதலாவது முரடனைப் போலவே இவனும் கெட்ட எண்ணத்தோடு செயல் புரிகிறவனாகத்தான் இருப்பான்எவ்வேளையிலும் இவன் தன்னை பலாத்காரம் செய்யக் கூடும்-என்று அவள் நினைத்தாள். அவன் அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். அவளால் அவனுக்குச் சமமாய் வேகமாக. நடக்க இயல்வில்லை. பயமும் பலவீனமும் அவளைத் தள்ளாடச் செய்தன. இருட்டு வேறு, சரியான தடமும் இல்லை. அடிக்கடி வழியில் கிடந்த ஏதேதோ அவள் வாதங்களை ககம் விசாரித்து தொல்லை கொடுத்தன், கல்லும் முள்ளும தங்கள் சக்தியைக் காட்டிக் கொள்ளத் தவறவில்லை. ஒரு இடத்தில் கல் ஒன்று காவில் கடுமையாகத் தாககி விடவே, அவள் அம்மா!' என்று ஓலமிட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். விரலைக் கையினால் பிடித்தாள். ரத்தம் வருவதாகத் தோன்றியது. சகிக்க முடியாத வலி. அவனோ உம்...உ.ம்., சீக்கிரம்.சத்தம் போடாதே. எழுந்து மெது மெதுவாக நடந்து பாரு’ என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவளுக்கு எரிச்சல் ஏற்பட்டது. நான் எக்கேடும் கெடுகிறேன். என்னை சும்மாவிட்டு விட்டுப் போனால் போதும்.’’ என்று முனங்கினாள். அவன் இவ்வளவு சிரமப்பட்டு விட்டு மறுபடியும் உன்னை ஆபத்திலே சிக்க விடுவது நியாயமாகாது’ என்று சொன்னான்... அவள்