பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் ( 19 பள்ளிக்கூடத்து விளையாட்டு வீரன். பெரிய ஹாக்கி சாம்பியன். இந்தியாவிலேயே சிறந்த ஆட்டக்காரனாக வரவேண்டும் என்பது அவனது ஆசை, அதற்காகப் பயிற்சிகள் செய்து கொண்டிருந்தான். கனவுகள் வளர்த் தான் அப்படியே அவன் வளர்ந்திருக்கக் கூடுமோ என்னவோ! வாழ்க்கை அவனுக்கு வாய்ப்பு அளிக்கவில்லைக் பாவம். மாவட்ட விளையாட்டுப் போட்டி ஒன்றின்போது, எதிர்க்கட்சி முரடன் ஒருவன் விக்டரின் காலைக் குறிவைத்து முரட்டுத்தனமாக மட்டையால் அடித்தான். விக்டருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஏதோ கோளாறாகி, அவன் கால் விளங்காமல் போய்விட்டது. விளையாட்டு மைதானம் பக்கமே அவன் தலைகாட்ட முடியாமல் ஆகிவிட்டது. சிலபேருக்கு வாழ்க்கை ரொம்பவும் உதவி செய்கிறது என்று தாராயணன் சொன்னான். சோப்ளாங்கி சுப்பு கண்கண்ட உதாரணம் என்றான். கப்பு, வெறும் சோப்ளாங்கி என்றே பள்ளிக்கூட காலத்தில் எல்லோரும் சொன்னார்கள். ஒவ்வொரு வகுப் பையும் அவன் அவசரப்பட்டுத் தாண்டி விடுவதில்லை. சாவகாசமாக இரண்டு வருஷம், மூன்று வருஷம் என்று தங்கித்தங்கியே மேலே போன்ான். மாப்பிள்ளைப் படிப்பு’ என வாத்திமார்களே பரிகசித்தார்கள். அந்த அந்தஸ்து அவனுக்குக்கிட்டியது. மோட்டார் கம்பெனி முதலாளி ஒருவரின் மருகப்பிள்ளை ஆனான். அதன்பிறகு கேட் ானேன்? அவனே அந்த கம்பெனி முதலாளி ஆனான். பல பஸ்கள் பல ரூட்டுகளில் ஓடின. பணத்தை அள்ளிக் கொடுத்தன. அவன் பெரிய லட்சாதிபதி ஆகிவிட்டான். இளம்பருவ சிநேகிதர்கள் எதிர்பட்டால் அவனுக்குக் கண்ணே தெரியாது. யாரையும் கண்டு கொள்வதில்லை அவன். அது சரி. நீர் என்ன செய்கிறீர்னு தான் கேட்கவே வில்ல்ையே நீரும் சொல்லவெt உம்ம விஷயம் என்ன?’ என்று சுந்தரம் விசாரித்தார்.