பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீன் (; வல்லிக்கண்ணன் தான். அவனைக் கண்டதும் செல்வநாயகம் ஆத்திரம் கொண்டார். 'ஏன்டா இங்கே உட்சார்ந்திருக்கே திருட்டுக் கழுதை: எழுந்து போடா, நாயே! என்று எரித்து விழுந்தார். அவனை விரட்டியபிறகே அவருக்கு திருப்தி வந்தது. சிறிது தூரம் நடந்ததும், ரோடு ஒரத்தில் ஒரு கிழவி நிற்பதை அவர்கள் கண்டார்கள். - 'ஐயா, நான் அத்தப் பக்கம் போக வேண்டும். தனியா ரோடை கடத்து போக பயமாயிருக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று பணிவாக அவள் வேண்டினாள். - சின்னசாமி அவள் கையைப் பிடித்து அவளை மெதுவாக அழைத்துப் போய் ரோடின் மறுபுறத்தில் விட்டு வந்தார். அவர் திரும்புகிறவரை காத்து நின்ற செல்வநாயகம் எரிச்சலுடன் சொன்னார்: 'சாக மாட்டாம அலையுதுக சனியனுக. வீட்டிலே விழுந்து கிடக்க வேண்டியது தானே! எதுக்காக இங்கே வரனும் இப்படி அவதிப்பட இணும் போறவாறவங்களுக்கும் தொந்தரவு!” . சின்னசாமி சிரித்துக் கொண்டார். அதன் பின் ஏதோ ஒரு குறிப்பு பதுங்கிக் கிடந்ததாகவே தோன்றியது. ஒரு இடத்தில் தொழிலாளி ஒருவன் நின்று கொண்டிருந் தான். பெரிய மூட்டை ஒன்று தரையில் கிடந்தது. "ஐயா மூட்டையை கொஞ்சம் தூக்கி விடுங்க. ஒரு கை கொடுத்து உதவுங்க! என்று கெஞ்சலாக கேட்டான். வேறே வேலை இல்லை போ என்று முனகியபடி முன் னேறினார் செல்வநாயகம். சின்னசாமி அந்த ஆள் மீது இரக்கம் கொண்டார். அவன் அருகில் சென்று, அவன் அந்த முட்டையைத் தலைமீது தாக்சி