பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் ) : வைத்துக் கொள்வதற்கு உதவினார். அவன் நன்றியை முகத்தில் தேக்கி நல்லாருப்பிங்கய்யா என்று கூறிவிட்டு நடந்தான். செல்வநாயகம் நண்பரை அனுதாபத்தோடு பார்த்தார் "இப்படி இருக்கானே இவன் சுந்த அப்பாவியாக’ எனச் சொல்லாமல் சொன்னது அந்தப் பார்வை. சின்னசாமி அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார். சேவை, தொண்டு, பரோபகாரம், அன்பு என்பதெல்லாம் உமது பேச்சில் புரளுகிறது. எப்படி இதை எல்லாம் செய் வது என்று தெரியவில்லை எனப் புலம்புகிறீர். காமிராவும்: பப்ளிசிட்டி சாதனங்களும் சூழ்ந்திருக்க, பெருமைக்காகப் பொதுநல சேவை புரிந்து மகிழ ஆசைப்படுகிற இனத்தைச் சேர்ந்தவர்தான் நீரும் உண்மையான மனித நேயம் உமது உள்ளத்தில் ஊற்றெடுக்கவில்லை. இப்படி அவர் எண்ணி ன்ார். எனினும் இதை வாய் திறந்து நண்பரிடம் சொல்ல வில்லை அவர், செல்வநாயகம் உற்சாகமாகப் பேசினார்: திருமூலர் அழகாகச் சொல்லியிருக்கிறார். யாவர்க்கும் எளிது பகவுக்கு ஒரு கைப் புல் கொடுப்பது. யாவர்க்கும் எளிது இனிய சொற். கள்ை வழங்குவது, இப்படி வரும். அந்தப் பாட்டு உமக்கு நினைவு இருக்கிறதா?” 'இல்லையே! என்றார் சின்னசாமி. ஆனால் எனக்கு திச்சயமாகத் தெரிகிறது. யாவர்க்கும் எளிது பெரும் பேச்சு பேசிக் கொண்டிருப்பது என்று அவர் மனம் கூறியது; தனக் குள்ளாகத்தான்! مسة