பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 45 ஒடுகிற ரயில் வண்டி எனக்கு: 'பறக்கிற ஏரோப்ளேன்! முனு சக்கர சைக்கிள் வரும்: எல்லாம் நிஜமாகவே, அப்போதே, வந்து சேர்ந்து விட்டது, போலவும், தங்களுக்குக் கிடைத்து விட்டது. போலவும், அவற்றைத் தொட்டு, விய்ந்து, அனுபவவித்து மகிழ்வது போலவும் அக்குழந்தைகள் பேசிக் களித்தனர். நாளுக்குநாள் அவர்களது கனவு இனிமை கூடியது” பேச்சில் சுவை ஏறியது; ஆசைகள் அற்புத நயங்களோடு மலர்ந்து உதிர்ந்து கொண்டிருந்தன. மாமா எப்ப வருவா? எந்த ரயிலுக்கு வருவா?இன்னும் எத்தனை நாள் இருக்கு?-இதேதான் ஓயாத பேச்சு, ஒழியாத கவலை அவர்களுக்கு. ராமலிங்கம் வருகிற நாளும் வந்து சேர்ந்தது. அன்று வீடே திருவிழாக் கோலம் பூண்டுவிட்டது. எல்லோருக்கும் ஆனந்தம். எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள் கடியாரத்தை அடிக்கடி பார்த்தார்கள். உள்ளுக்கும் வாசலுக்கும்ாய் அலைந்தார்கள். தெருவைத் தெருவைப் பார்த்தார்கள். சிறுமிகளும் சிறுவர்களும் தெரு வாசலிலேயே காவல் கிடந்தார்கள். ‘எங்க மாமா வரப்போறா. இப்போ வந்திருவா..." என்று சற்றைக்கொரு தரம்-தெரிந்தவர்களிடம், தெருவில் போனவர். வந்தவரிடம் எல்லாம்-ஆனந்தப் பெருக்கோடு ஒலி பரப்பினார்கள். ஆவலே உருவாகித் துறுதுறுத்துக் காணப்பட்டார்கள். உரியநேரம் வந்தது. வீட்டின் முன் டாக்சியும் வந்து தினறது.