பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ) வல்விக்கண்ணன் மோதுகிற கோயில். அதேபோல், நீர் வற்றிப்போன கடலுக் குள்ளும் கல் கட்டிடங்கள், இடிபாடுகள், விழுந்து கிடந்த கல்தூண்கள் தென்பட்டன. முந்திய மாலை அவன் வந்த போது கடல் கடலாக இருந்தது. காலையில் அலையாடும் நீர்ப்பரப்பைக் காணவில்லை. சமீபத்தில் தான் நீர் உள்வாங்கி யிருக்க வேண்டும். தரை சதசதவென்று அங்குமிங்கும் நீர்ச் கவடுகளோடு இருந்தது. அவன் உள்ளே இறங்கிப் போனான். தினதுமாறாகக் கிடந்த துரண்களையும் கல் கட்டுமானங் களையும் தாண்டித் தாண்டி சிரமத்தோடு முன்னேற வேண்டியிருந்தது. ஒரு சிதைந்த கட்டிடத்தைக் கடந்து திரும்பவும் சற்று தொலைவில் ஒரு துண் கவர்ச்சியாக நின்றது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாதித்துரண். அதுவரை போய், சிற்பத்துணைத் தொடவேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனாலும், உள்ளத்தில் ஒரு உதைப்பு. அலைகள் பொங்கி எழுந்து மறுபடியும் வந்து விட்டால்? ஓடிவர துரண்களையும் சிதைவுகளையும் தாண்டித் தடுக்கி தடுமாறி கரைக்கு வருவதற்குள் ஆபத்து நேரிடலாமே? இந்த பய உணர்ச்சி விழிப்பு தந்தது. இக்கனவுபற்றியே எண்ணிக் குழம்பிய அவன் தன் நண்பன் ஒருவனிடம் அதை விவரித்தான். தனது பயத்தையும் வெளியிட்டான். கவி உள்ளம் கொண்ட நண்பன் தன் மனப்பதிவுகளை ---> * ایع مهم ، அழகாகச் சித்தரித்தான் இப்படி 'கனவுகளும் கற்பனைகளும் மனித மனசின் அற்புத வெளிச்சங்களைக் காட்டுவது. பாதியில் நிற்கிற சிற்பத் துணை அடைய முயன்று, அலைகளுக்கு அஞ்சித் திகைத்துப் பின்வாங்கி விழிக்கிற மனிதன் மாதிரி தான் அந்ேக கலைஞர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையின் பாதுகாப்பான கரைக்கு, அழைத்தலுக்குச் செவி சாய்த்துப் பின் வாங்காமல் மேலே மேலே முன்னேறி, சிற்பத் துணை அடைந்து