பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப்பிள்ளை 'ஏது, இன்னிக்கு சிக்கிரமே சாப்பிட வந்தாச்சு? அதுக் குன்ளே பசிக்க ஆரம்பிச்சுட்டுதோ? - கிண்டலாகக் கேட்டான் பாவாடை தாவணிக்குமரி. அவளுக்கு பதின்மூன்று- பதினாலு வயக இருக்கும். மலரும் பருவத்தின் விளிம்பில் நின்றவள், வயசுக்கேற்ற தனி மேஆகும் வனப்பும் பெற்றிருந்தாள். அந்தச் சிறிய உணவு விடுதியினுள் நண்பனுடன் பிரவேசித்த சந்திரன் அவளைப் பார்த்துச் சிரித்தான். ஆமா. பசிதான்’ என்றான். பிறகு தண்பனிடம் சொன்னான். இவங்கதான் இந்த உணவு விடுதியின் நிர்வாகி, இயக்குநர், மேலாளர் எல்லாமே. இவங்க இந்த இடத்தின் ராணி என்று கருக்கமாகச் சொல்லிப் போடலாம். இவங்க இஷ்டப்படி தான் இங்கே எல்லாமே நடக்கும். இல்லையா ராணியம்மா? அவள் முகம் மலர்ச்சி காட்டியது. பேசாமல், இரண்டு இலைகளை எடுத்து வந்தாள். மேஜை மீது பரப்பினாள். தம்ளர்களில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள். இந்த அம்மா, நேற்று நான் ரொம்ப நேரம் கழிக்க வந்தேன்னு கோபிச்சுக்கிட்டாங்க. ஏன் லேட் இத்தனை நேரம் கழிச்சு வந்தா என்ன அர்த்தம்? உங்களுக்காக எல்லாத்தையும் தனியே எடுத்து வச்சுப் பாதுகாக்க முடியுமான்னு கார்வார் பண்ணினாங்க. இன்னிக்கு ஏன் சிக்கிரம் வந்தேன்னு விசாரணை பண்றாங்க. நேரம் கழிச்க