பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? O வல்விக்கண்ணன் அவளை இனம் கண்டுகொண்ட சந்தோஷம் முகத்திலே ஒளிர கைலாசம்பிள்ளை அந்தப்பக்கம் போனார். மற்றவரும்: அவரை தொடர்ந்தார். 'நீங்க நிற்கிறதை நான் பார்க்கவே இல்லியே! என்று தெரிவித்தார் பெரியவர். . என்ன சவுக்கியமெல்லாம் எப்படி?’ என்று விசாரித் தவன், வாங்க, இங்கே ஒதுங்கி நின்று பேசலாம் என்று. பின்ளை பார் கோயிலில் சிறிது தள்ளி பக்தர் அலைகள் தொடாத வெளியில் போய் நின்றாள். அவள் கூட வந்த வளும் அவளை ஒட்டியே நகர்ந்தாள். மற்ற இருவரும் அந்தப் பக்கமாகப் போய் அவர்கள் எதிரே நின்றார்கள். "நீங்க பாலத்திலே வரையிலேயே நான் கண்டுபுடிச் சிட்டேன். மீனாட்சி கிட்டேயும் சென்னேன் அதோ கைலாசம்பிள்ளை வாறாரு; நம்மை பார்க்கிறாரான் னு பார்ப்போமின்னு. நீங்க என்னடான்னா தரையிலே எதையோ போட்டுட்டு அது கிடைக்குமான்னு தேடிக்கிட்டுப் போறவங்ககணக்கா, பார்வையை அங்கே இங்கே திருப்பா ம நடந்து போரீக: இதை சொல்லிவிட்டு, தனது பேச்சை தானே ரசிப்பவள் போல் கடகடவென்று சிரித்தாள் அவள் மீனாட்சியும் குகுங்’ சிரிப்பை சிந்தினாள். இவள் யாராக இருக்கும் என்ற எண்ணம் கந்தபிள்ளை முளைக்குள் சிறிது அரித்தது விடை காண முடியாததால், யாரோ, அண்ணாச்சிக்கு தெரிஞ்சவ போலிருக்கு என்று சிறு சொறிதல் சுகம் கண்டது. "இப்பவும் ஊரோடு தான் இருக்கீகளா? என்று அவள் கேட்டாள்.