பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 C வல்விக்கண்ணன் என்ன யோசனை? என்று பெரியவர் கேட்கவும், *இல்லே. காலவோட்டத்திலே ஒவ்வொருத்தர் என்னமா மாறிப்போயிருறாங்க பார்த்தியான்னு நெனச்சேன். அது தான்’ என்றார் மற்றவர். இதை அவர் அன்று பிற்பகலில் மீண்டும் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. குறுக்குத்துறை காப்பி கிளப்பில் காப்பியும் வடையும் கைலாசம்பிள்ளைக்கு திருப்தி தரவில்லை. விசாகக் கூட்டமில்லா காப்பியை கழுரிைத்தண்ணி ஆக்கிப்போட்டான். வடையை இம்புட்டுப்போலே தேச்சுப் போட்டான், சவத்துப்பயலுக சம்பாதிக்கனும்கிற ஆசை யாரைத்தான் அம்மா விட்டுது?’ என்று முனகினார். - இரண்டு பேரும், ஈரவேட்டியை விரித்து காற்றிலும், வெயிலிலும் உலர்வதற்காக உயர்த்திப் பிடித்தபடி மெதுவாக நடந்தார்கள். டவுன்போய் சேர்வதற்குள் வேட்டி காய்ந்து விட்டது. அதை மடித்து பைக்குள் வைத்துக்கொண்டு. போத்தி ஒட்டல் தேடிப் போனார்கள். அங்கே பூசி, காப்பி சாப்பிட்ட பிறகு, காந்திமதி நெல்லையப்பர் கோயிலுக்குப் போய் கும்பிட்டு, சாவகாசமாகப் பிரகாரம் சுற்றினார்கள். முன்மண்டபத்தில் ஹாயாக உட்கார்ந்து பொழுதுபோக்கினார்கள். பிறகு, தெரிந்தவர் ஒருவரின் ஜவுளிக்கடையில் அமர்ந்து ஊர் கதை பேசி மகிழ்ந்தார்கள். நேரமாயிட்டுது என்று மனம் உணர்த்தவும் எழுந்து நடந்தார்கள். குமார விலாஸ் ஒட்டலில் எலுமிச்சஞ் சாதமும் காரவடை'யும் காப்பியும் சாப்பிட்டார்கள், மறுபடியும் குறுக்குத் துறைக்கு நடந்தார்கள். ஒன்றரை மைல் ஒரு தூரமாகத் தெரியவில்லை. வழி நெடுக வண்டி களும் சைக்கிள்களும் பாதசாரிகளுமாக ஜேஜே. என் றிருந்தது.