பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 o வல்லிக்கண்ணன் ஞானப்பிரகாசத்தின் முகம் கறுத்தது. அவருக்கு கோபம் பொங்கி வந்தது. ஏய் அயோக்கியா என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கவாடா வந்தே என்று. சீறினார். சிதம்பரம் அமைதியாகப் பேசினான். ஏன் ஐயா கோபப்படுகிறீர்கள்? நீங்கள் மட்டும்தான் கேள்வி மேல் கேள்வி கேட்கனும், மற்றவங்க கேட்கப்படாதுங்கிறது என்ன நியாயம்? என்றான், மற்றப் பையன்கள் உற்சாகமாகச் சிரித்து, ఙ}& கொட்டினார்கள். பெரியவரின் ஆத்திரம் அதிகரித்தது. போங்கடா இங்கேயிருந்து. எனக்கு வாற வரத்துலே கையிலே அகப் படுறவனை தொலிச்சுப்போடுவேன் தொவிச்சு!" என்று கூப்பாடு போட்டார். - 'ஐயா ஐயா, மெதுவா, உங்களுக்கு ரத்தக் கொதிப்பு எதுவும் இல்லையே? அப்புறம் ரொம்ப டேஞ்சர் ஆயிடப் போவது, டவுனிலே ஒருத்தருக்கு அப்படித்தான் ஆயிட்டுது’ என்று சிதம்பரம் சொன்னான். திரும்பிப் பாராமலே நடத்தான். பட்டி மன்றத்தில் வெற்றி பெற்ற பேச்சுப்புவியை. சூழ்ந்து பாராட்டி நடக்கும் வியப்பர்கள் போல் மற்றப் பையன்கள் ஆவனைத் தொடர்ந்தார்கள். 蔷下