பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திப்பு கவிஞர் ஏகநாதன் எப்பவுமே சொல்வி வந்திருக்க கிறார். - அவருக்கு முதன் முதலில் கவிதை ஒளி காட்டியதே ஒரு பெண்தான்! அவளுடைய காந்த ஒளிக் கண்கள் தான். சன்னலின் பின்னே சந்திரோதயம் ஆக விளங்கினாள் அவள், வீட்டு வாசல் படியில் புத்தம் புதிய கொலு பொம்மை போல் அடிக்கடி காட்சி தந்:ாள். மின்னல் இடையும் பின்னல் சடையும் நாட்டிய அசைவுகள் காட்ட அவள் தெருவிலே நடந்தாள். அப்போதெல்லாம். ஏகநாதன் உள்ளத்தில் உணர்ச்சி அலைகளை எழுப்பின அவளுடைய சுடர்மணிக் கண்கள். படித்துவிட்டு வேலை தேடுவதாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்த ஏகநாதனுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் பார்த்து ரசிக்கவும் பேசி மகிழவும் இனிய பொழுது போக்கு ஆக உதவினாள் அவள். மொத்தமாகவும் தனித்தனியாகவும் அவளை தரிசித்து இன்ப மகிழ்ச்சி அடைவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். வேலையோடும் வேலை இல்லாமலும், வேளைகெட்ட வேளைகளில் எல்லாம், தனியாகவும், இரண்டு மூன்று பேர் களாகவும் அவர்கள் அந்தத் தெரு வழியாகப் போனார்கன். திரும்பத் திரும்ப'தடை பழகினார்கள். வெண்ணிலா- அவள் பெயர் அதுதான் என்று அவர்கள் வெகு விரைவிலேயே தெரிந்து கொண்டார்கள்-தன் மீதுதான் அதிக ஆசையும் ஈடுபாடும் கொண்டிருக்கிறாள் என்று