பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ8 () வல்லிக்கண்ணன் ஒவ்வொருவரும் நம்பினார்கள். ஏகநாதன் அதிகம் நம்பினார். ஒரு கவிஞராக வளர வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. எப்பவும் எதையாவது கிறுக்கிக் கவிதை என்று பெயர் பண்ண ஆவர் முயன்று கொண்டிருந்த காலம் அது. வெண்ணிலா பற்றியும், அவளது சுட்டும் சுடர்விழிகள் பற்றியும், அவை தனது உள்ளத்தில் மூட்டிவிட்ட தீ பற்றியும் ஏகநாதன் அடுக்கு மொழிகள் தொடுத்து வைத்தார். அந்தக் கவிதையை நண்பர்கள் மத்தியில் அரங்கேற்றம் செய்தார். அவர்கள் கைகொட்டி ஆரவாரித்து அமோகமாகப் பாராட்டினார்கள். வெண்ணிலா குடமெடுத்து கோலமயில் போல் வாய்க்காலுக்குப் போகும்போது, அவள் தந்த அழகுக் காட்சியை வர்ணிக்கும் வரிகளை உரக்கப் படித்து மகிழ்ந் தார்கள். அந்திவேளையில் புள்ளிமான் போல் துள்ளி அவள் படிக்கட்டில் ஏறிச் செல்லும் லாவகத்தைப் பாடிக் கணித்தார்கள். பார்க்கப்படுவதில் பெண் தனி மகிழ்வு பெறுகிறாள். இளைஞர்களின் ரசனைப் பார்வை வெயில் இளம் பெண்ணின் உள்ளத்தில் விசேஷ மலர்ச்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு அவள் முகத்தில் வசீகர வனப்பு சேர்க்கிறது. அவள் கண் களில் மகிழ்வின் ஒளி சுடரிடுகிறது. இதை வெண்ணிலாவும் பிரதிபலித்தாள். அது ஏகநாதனை பித்தன் ஆக்கியது. அவரை மேலும் மேலும் கவிதைகள் எழுதும்படி செய்தது. வெண்ணிலா தன்னையே அதிகம் நேசிக்கிறாள் என்று ஏகநாதன் நம்பினார். அவர்தான் கவிதை எழுதுகிறார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. நண்பர்களின் பேச்சும், "என்ன கவிஞரே, அகோ கவிஞர்ே என்று அடிக்கடி அழைப்பதும் அதை அவளுக்குப் புரிய வைத்திருந்தன.