பக்கம்:சுதந்திரமா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சுதந்தரமா !

' கேற்றுக் காலேயில் என் பையில் எத்தனே இருந்த தென்று யோசித்துப் பார்த்தேன். முதல் நாள் ஒன்றரை அணுவுக்கு எள் வாங்கினது ஞாபகம் வந்தது. அதுபோக அன்று எத்தனே மிச்சம் இருந்தது ?" மறுபடியும் யோசனை யில் ஆழ்ந்தாள். -

சரி, சரி ; சில்லறைச் செலவு என்று, விட்டுப் போன கணக்குக்கு வகை எழுதி விடுகிறேன். நீ ஏன் விணுக மண்டையைக் குடைந்து கொள்கிருய்?" என்றேன். என் கண் சுற்றியது எனக்கல்லவா தெரியும் ? - - கடைசியில் என் மனைவியின் செலவில் இனம் தெரி யாத சில்லறைச் செலவு என்று ஒரு ரூபாயை எழுதி வைத் தேன். இது ஒருநாள் சமாசாரம். இன்னும் பலநாள் இப் படியே வாக்குவாதம், வாய்ச் சண்டை, கோபதாபங்களுக் கிடையில் இனங் தெரியாத செலவுகளாக எழுதியவை. எவ்வளவோ ! அதுமட்டுமா? செலவு எழுதாமலே விட்டுப் போனது எவ்வளவோ ? - - இப்படி வீட்டுக் கணக்கை எழுதுவதால் யாருக்கு என்ன பிர்யோசனம்?' என்று சில சமயங்களில் தோன்று கிறது. எழுதின பழங் கணக்கைப் பார்த்து, இனி வரும் மாசத்துக்குத் திட்டம் போடுவதும் முடியாத காரியம்; நடக்காத காரியம்.

ஆளுலும், "நாமும் கணக்கு எழுதி வருகிருேம் " என்ற திருப்தி இருக்கத்தான் இருக்கிறது. அது மாத்திரம் அன்று. என் மனேவியும் கானும் பேசிக் கொள்ளவும். சண்டை பிடிக்கவும், ஊடல் கொள்ளவும், சமாதானம் அடையவும் இந்தக் கணக்கு எவ்வளவு உபயோகப்படு கிறது. தெரியுமா? இது இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை ரெயில் தண்டவாளம் போலவும், சிமிட்டுக் கட்டடம் போலவும், கோழிமுட்டை போலவும் ஒரே மாதிரி ஏற்ற இறக்கம் இல்லாமல் சப்பென்றல்லவா போய்விடும்? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/104&oldid=686010" இலிருந்து மீள்விக்கப்பட்டது