பக்கம்:சுதந்திரமா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவுக் கலே * 17

காரியங்களைப் பார்த்தாலே அவன் கலேயுணர்ச்சி விளங் கும். உணவென்பது பசியைப் போக்கும் ஒரு பொருள். பசியைப் போக்கச் சத்தும் அளவும் வேண்டும். நன் ருக வளர்ந்த மனிதன் புஷ்டியான ஆகாரம் இத்தனே கவளம் சாப்பிடவேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. அதன்படி உணவு உண்பதாக இருந்தால் நாம் ஆஸ்பத் திரிகளிலே போஜனசாலையை ஏற்படுத்திக்கொள்ளலாம். பசி யென்கின்ற கோய்க்கு, உணவு ஒரு மருந்துதானே? அளவும். சத்துமாகிய உணவின் இலக்கணத்துக்கு மேலே, நாம் பலபல இலக்கணங்களைக் கவனிக்கிருேம். முதலில் அது நாக்குக்கு இனியதாக இருக்கவேண்டும். சுவையுணர்ச்சியைத் திருப்திப் படுத்தவேண்டும். எந்த எந்தச் சுவை நமக்கு விருப்பம் இல்லையோ அந்தச் சுவைப் பொருளோடு வேறு இன்சுவைப் பெர்ருளேச் சேர்த்து உண்ணுகிருேம். இந்தச் சுவையறியும்வேலே காக்கு என்னும் அதிகாரியினுடையது. வயிற்றை மாத்திரம் பார்த்தால் உணவுக்கு அளவும் சத்தும் இருந்தால் போதும். நாக்கு என்னும் ரஸிகன் நடுவிலே இருப்பதனால் உணவுக்குச் சுவை அவசியமாகி விட்டது. உணவு விஷயத்தில் சுவையே தலைமையானது. அளவும் சத்தும் இல்லாவிட்டாலும் சுவை இருந்தால் நாக்கு நீண்டு விடுகிறது. நாக்குக்கு அடிமையாகி வியாதியைச் சம்பாதித்துக் கொள்கிருேம். சுவையின் அதிகாரம் அவ்வள்வு அதிகமாக இருக்கிறது. -

உண்வு என்ருல் சுவைப்பொருள் என்று அறுதியிட்டு விட்டார்கள். ஊசியினல் உணவு ஏற்றுவதில்லையா ? மூக்கின் வழியே உணவைத் திணிப்பதில்லையா? ஆலுைம் வாயின் வழியே, நாக்கின் மதிப்புப் பத்திரம் பெற்ற பிறகு அனுப்பப்படும் உணவையே உணவாகக் கருதுகிருேம்.

டாக்டர்கள் சொல்கிற அளவும், சத்தும், காக்குப் பெருமான் அளந்து பார்க்கிற சுவையும் சேர்ந்தால்

3 ।

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/25&oldid=685932" இலிருந்து மீள்விக்கப்பட்டது