பக்கம்:சுதந்திரமா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்தரமா !

தம்பி, ஏன் அப்படிப் பார்க்கிருய்? இந்த ஈரத்தில் அளேந்தால் உன் உடம்புக்கு ஆகாதென்றுதான் சொல் கிறேன். வழியில் போகிறவர்கள் மேலே அழுக்குத் தண் னிர் தெளிக்கும். அவர்களுடைய ஆடையில் தெறித்தால் அது விணுகிவிடும் - உனக்கு விளையாட வேறு இடம் இல்லையா? மழை பெய்து ரோட்டுக்குப் பக்கத்தில் தேங்கியிருக்கும் தண்ணிர் தான அகப்பட்டது? எத்தனையோ பிள்ளைகள் பொழுதை நல்ல படியாகப் போக்குகிருர்களே ! நீ இந்தமாதிரி பொழுதை வீணடிப்பதோடு உனக்கும் மற்றவர்களுக்கும் தொல்லையை உண்டாக்கிக் கொள்கிருயே!

தேங்கியிருக்கும் ஜலத்தில் உனக்கு இத்தனே ஆசை எதற்கு அந்த ஆசை வேறு வகையான பிராணிகளுக்கு உரியதல்லவா? உன் தாய் தகப்பனர் உன்னே மனிதக் குழந்தையாக வளர்க்கிருர்களே ஒழிய, வராகக் குட்டி யாகக் கொஞ்சங்கூட எண்ணியிருக்க மாட்டார்களே. கங்கை, யமுனே, காவேரி என்று புண்ணிய தீர்த்தங்

களுக்குப் போய் ரோடிவிட்டு வருவதைப் பெரிய புண்ணிய, காரியமாக எண்ணும் இந்தத் தேசத்தில் நீ பிறந்திருக் கிருய். இந்தத் தேக்கத் தண்ணிரில் வந்து அளேகிருயே 1 இந்தத் தீர்த்தக்கான உனக்கு அகப்பட்டது? உனக்குப் புத்தியில்லை யென்று சிலர் கினேக்கலாம். உன்னை இப்படி வளர்த்தவர்களுக்குத்தான் புத்தி எங்கே போயிற்றென்று சிலர் கேட்பார்களே ! - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/9&oldid=685916" இலிருந்து மீள்விக்கப்பட்டது