பக்கம்:சுதந்திரமா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - சுதந்தரமா !

இந்தச் சாட்சி எல்லாவற்றிற்கும் கிடைக்காது. வீட்டு வாடகைக்கு வீட்டுக்காரர் ரசீது தருவார். ஜவுளிக் கடை யில் ஆடைகள் எடுத்தால் பில் கிடைக்கும். டாக்டருக் குப் பணம் கொடுத்தால் அவர் ரசீது தருகிருர் : அல்லது முன்பே அவர் தந்த பில் இருக்கிறது. பையனுக்குச் சம்பளம் கட்டினல் பள்ளிக்கூடத்தில் ரசிது தருகிருர்கள். ஆனல் காய்கறி வாங்கினல் அதற்குப் பில்லோ, ரசீதோ ஏது? வெளியிலே புறப்படுகிருேம். பஸ்ஸில் போனல் கண்டக்டர் கொடுக்கும் டிக்கட்டைப் பத்திரப்படுத்தி வைத்து வீட்டுக்குக் கொண்டு வந்து கணக்கு எழுத முடியுமா? அப்படியே நினைவோடு செய்தாலும், ரிக்ஷா விலே போனல் அவனிடம் ரசீது கேட்பதா? குழந் தைக்குப் பெப்பர்மிட் வாங்குகிருேம் முக்காலணுவுக்கு ஏதோ வழியில் இருக்கிற வெற்றிலே பாக்குக் கடை யில் வாங்குகிருேம். அதற்குப் பில் போட்டுத் தா" என்ரு கேட்பது? - -

- ஆகவே இந்த வெளசர் சமாசாரம் வீட்டுக் கணக்கு விஷயத்தில் சரிப்பட்டு வராது. நம்முடைய ஞாபக சக்தியை நம்பித்தான் வீட்டுக் கணக்கை எழுதவேண்டும். வீடு என்ருல் காம் மட்டுமா இருக்கிருேம்? கம்முடைய மனைவி, குழந்தைகள், தம்பி, தங்கை-இப்படிப் பலபேர் இருக்கிறதல்ைதான் குடும்பம் என்றும் வீடு என்றும் - பெயர் வருகிறது. கணக்கை யாராவது ஒருவர் வரன் முறையாக எழுதினல் ஒழுங்காக இருக்கும். அவரவர்கள் தங்கள் தங்கள் செலவைத் தனித்தனியே குறித்துக் கொடுத்து விட்டால் எல்லாவற்றையும் சேர்த்து எழுதி விடலாமே! என்று விஷயங் தெரியாதவர்கள் சொல்ல லாம். வீடு என்பது காரியாலயமா? வரவு செல. க் கணக்கு எழுதுகிற கணக்குச் சாவடியா? பையன் ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ வாங்கிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/94&oldid=686000" இலிருந்து மீள்விக்கப்பட்டது