பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I02 யுண்டாகும்; உரோமம் பொடிக்கும்; கண்களில் நீர்பெருகிக் கால்வழிந்து ஒடும்; வாய் துடித்து அலறும்; இரு செவிகளிலும் கும்மெனும் ஒசை கேட்கும்; மெய்முழுதுங் குளிர்ந்திடும்; இதயம் துடித்து அசையும்; கையிரண்டுங் குவியும்; காலி ரண்டுஞ் சுலவிடும்; மனங்கனிந்து உருகும்; அறிவு நிறைந்து ஒளிரும்; சித்தம் மன அறிவுகளுடன் ஒன்ருகிக் களிக்கும்; அகங்காரத்தின் அதிகரிப்பு அடங்கும் ; சகத்தைக் காண உள்ளம் தழைத்து மலரும்; உடம்பு அறிவுமயமாகி ஆனந்திக்கும்; ஆன்ம தற்போதம் போயகலும்; தத்துவமனைத்தும் ஒருங்கே ஒழியும்; சத்துவம் மட்டும் தனித்து நின்று ஓங்கும்; உலக விடயங்கள் எல்லாம் மறைந்திடும்; அலகிலா அருளின்மேல் ஆசை பொங்கும்; உள் ளத்தில் எழுகின்ற தனியன்பு உயிரெல்லாம் மலர திருவருளாக ஓங்கும்; அன்புருவம் ஆகும். இங்ங்ன மாக, அன்புருவான ஆண்டவன் அடிகளின் பேரன்பினுல் அவர் உளங்கலந்து, உயிர் கலந்து, உடல் கலந்து, மற்றெல்லாங்கலந்து, அருளொளி யால் அவரை வேதித்து அவரது பூத உருவை அன்புருவம் ஆக்கின்ை. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட இரத்த மனத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம் உரத்திடை பந்தித் தொரு திர ளாயிட மடலெலா மூளை மலர்ந்திட அமுதம் உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட