பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 இனி, வேதாந்தம் அவத்தைகளைப் பற்றிக் கூறுவதையும் பார்ப்போம். அதனுள் அவத்தை கள் ஐந்தும் தத்துவங்களில் அடங்கும். தத்து வங்கள் முதல் தத்துவம், இரண்டாந் தத்துவம், மூன் ருந் தத்துவம் எனப்படும். முதல் தத்துவம் 30. அவையாவன : பூதம் 5, பொறி 5, புலன் 5, கன்மேந்திரியம் 5, கன்ம விஷயம் 5, கரணம் 4, அறிவு 1. இரண்டாந்தத்துவம் 30. அவையாவன: நாடி 10, வாயு 10, ஆசயம் 5, கோசம் 5. முன்ருந்தத்துவம் 36. அவையாவன: ஆதாரம் 6, மண்டலம் 3, மலம் 3, தோஷம் 3, ஏட8ண 3, கு ைம் 3, இராகம் 8. வினை 2. அவத்தை 5. அவையாவன : சா க் கி ர ம், சொர்ப்பனம், சு ழு த் தி, துரியம், துரியா தீதம். ஆகவே, வேதாந்தம் கூறும் துரியம், துரியா தீத நிலைகளைத் தான் சுவாமிகள் பரதுரியம், பரதுரியாதீதமாகக் கொண்டனர். சுத்ததுரியம், சுத்ததுரியாதீதமென இவற்றைக் கூறுவாருமுளர். இனி, தி ரு ம ந் தி ர ம் அவத்தைகளை விரித் துரைக்குமாறும் காண் பாம். திருமூலர் திருமந்திரத் திருமுறையால் மெய்ம்மொழிப் பொருளை உணர்த்தி யருளியதாகச் சுவாமிகள் கூறுகின் ருர். அவத்தை கள் ஐந்தும் அனுபவமாகுமிடங்களையும் ஆங் காங்கு ஆன்மாவுடன் கூடிக் காரியப்படும் கருவி