பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 சித்தி பெறுவான். பெறுவதோடன்றி அவனரு ளாலே அ ரு ள் ம ய ம | வ | ன். இந்நிலையில் ஆண்டவனே த் தோள் தழுவும் பெரும்பேறு கிடைக்கும். இவ்வனுபவ நிலையைத்தான் சிவ சாக்கிரம் என்பர். இதைக் குருசாக்கிரம் என்றுங்| கூறுவர். என்னுடைய தனித்தோழி இதுகேள் நீ மயங்கேல் எல்லாம்செய் வல்லவரென் னின்னுயிர்நா யகனர் தன்னுடைய திருத்தோளை நான் தழுவுந் தருணம் தனித்தசிவ சாக்கிரமென் றினித்தநிலை கண்டாய் பன்னுமிந்த நிலைபரசாக் கிரமாக உணரேல் பகர்பரசாக் கிரமடங்கும் பதியாகும் புணர்ந்து மன்னுநிலை மற்றிரண்டுங் கடந்தகுரு துரிய மாநிலையென் றுணர்கவொளிர் மேனிலையி லிருந்தே --திரு. 6: 82:74 இறைவனது தோள் தழுவும் இந்த நிலையை மணிவாசகப்பெருமான் பெற்றதாக ஒரு குறிப்பு காணப்படுகின்றது. சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்கா ணம்மானுய் -திருவாசகம். என்பது காண்க.