பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 47 மீதானத் தருள் ஒளியாய் விளங்கியநின் னடிகள் -திரு. 4: 2: 31 என்றெல்லாம் விளக்கியபடியால் தி ரு வ டி க ள் விளங்குவது பரநாதத்தின் மேலே; அத்துணையடி கள் ஒளியனுபவத்தையும், வெளியனுபவத்தையும் விளக்குவன ; அவை இன்பத் திருவுருக்கொண்டு அருளாம் திருநடம் செய்வதும் பரநாதங் கடந்தே; அருளனுபவம் விளங்குவதும் பரநாதத்திற்கப்பால்; பரநாதத்தில் பாசங்கள் எரிக்கப்பட்டுத் தனித்த சாதகன் அருள் ஒளியில் ஆ ழ் ந் து அருள் வடி வுற்றுத் திளைப்பது சிவதுரியாதீதமாகிய பரநாதத் தலத்தின் மேலே என்பது போதரும். எனவே, சிவ துரியாதீதமென்னும் சிவானுபவநிலையும் அருள் நிலை விளங்கு சிற்றம்பலமென் னும் சிவசுகாதீத வெளியும், மகாமெளன நிலையும், மீதானம் என்ற திருவடிப்படியும், நவநிலைகளுக்குள் மேலான பர நாதத்தலத்தின் மே லி ட மு ம் ஒன்று [ಿ! விளங்கும். சாதகனுக்கு இப்பெரிய அனுபவத்தைத் தந்து அருள் நெறியில் ஏறச் செய்துவருவது அருட்செயல். திருவருள் நிரந்தரமாக நிலைத்துள்ளவிடத்தைத் திருச்சிற்றம்பலம் என்பர். இங்குத் திருவடிகள் விளங்குதலின் அருள் நடம் புலனுகும். திருவருள் இயக்கம் திருநடம் எனப்படும். அது சாதகனுக்குப் புருவமத்தியில் அருள் ஒளியாய் அனுபவமாகும். * என் புருவ நடுவிருந்தான் ' என்று அ டி க ள் கூறுவர். சிவதுரியாதீத மேல்நிலையில் இவ்வருள் ஒளி அகலாதோங்கி நிரந்தரமாக நிலைக்கும்.