பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 காணப்பெற்ருல் ம னித் த ப் பிற வி யு ம் நமக்கு நிச்சயமாக வேண்டும். இதைக் கண்டவர் இறப்ப் தில்லை; சுத்தமாதி தேகங்கள் கிடைக்கப்பெறுவர். மேலும், சிற்சபையைக் கண்டவர்கள் சித்திகளை யெல்லாம் செய்வார்கள். பொற்சபையுட் புகுந்த வர்கள் புந்திமகிழ்வார்கள். மேலும் பொற்சபையை ஆன்ம ஆகாசம் என்றும் சிற்சபையைச் சீவாகாசம் என்றும் கூறுவர். மேலும், சுத்தசன் மார்க்கத் திற்குப் படிகள் மூன்று என்றும் அவை சிற்சபை, பொற்சபை, ஞ ா ன ச ைப என்றும் கூறுப. இம்மூன்று சபைகளிலும் பொதுவாக அருள் ஒளி நிறைந்துள்ளது. இம்மூன்று சபைகளிலும் அருள் ஒளியைச் சுதந்தரமாகப் பெற்று அவற்றிலுறும் ஆனந்த நடங்கண்டு அனுபவித்து, ஒளிநெறியில் தனிச்செங்கோல் நடத்திவருபவர்கள் அருட் பெருஞ்ஜோதி ஆண்டவனேயாகிய அடிகள். இவற்றுள் பொற்சபையில் அருளொளிக் காட்சி யனுபவமும், சி. ற் ச ைப யி ல் அருளமுதுண்டு தேக்கும் அனுபவமும் சிறப்பாக உண்டாகும். ஒளியின் ஒளியிலே, ஒளியொளியின் ஒளிநடுவிலே ஒன் ருகி, நன் ருகி, நின் ருடுகின்ற அருள்ஒளி என்று ஒளிநலம் பேசப்படுகின்றது இவற்றைப் பின்வரும் அடிகளிற் காண்க. பண்புறு சிதம்பரப் பொற்சபையு மாயதன் பாங்கோங்கு சிற்சபையு மாய்த் தெற்றியலு மச்சபையி னடுவினட மிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே -திரு. 6 100 15