பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வரையிலும் உபநிடதங்கள் அதற்குமேலும் பேசும். உபசாந்த நிலையாகிய சிவதுரியம் வரை உபநிடதங் கள் சொல்லுமென்ப. இ ந் நி லே குருதுரியம் எனவும்படும். தாயுமான அடிகள் முதலான மத சன்மார்க் கிகள் விதந்து கூறுவதும் மணிவாசகப் பெருமான் முதலிய சமய சன்மார்க்கிகள் அனுபவித்ததும் குருதுரியப் பெருநிலையே ஆகும். திருமூலர் மூன்று துரியங்களே வகுத்து உரைப்பர். இவை சீவ துரியம், பரதுரியம், சிவதுரியம் எனப்படும். இவற்றின் அனுபவம் முறையே சிவயோகம், சிவஞானம், சிவபோகம் என்பர். துரியத்தலம் மூன்றின் மேலே சுத்தசிவதுரியப்பதியில் தெரிவது சிற்றம் பலத்தே திருநடஜோதி ' என்று சுவாமிகள் கூறுகின் ருர். ஆகவே, சிவதுரிய அதீத அனுபவங் தான் முற்ற முடிந்த சிவானுபவம் என்பது இதுகாறும் எழுந்த ஆறந்தமுடிபாகும். இராமலிங்க சுவாமி கள் சிவதுரியத்திற்கு மேலே உள்ள அனுபவ நிலகளேச் சிறப்பித்துக் கூறுவாராயினர். இந்நிலை களே எந்த அந்தமும் இதுகாறும் கண்டதில்லை, விண்டதுமில்லை. இவற்றைச் சுத்தப் பிரணவ ஞான தேகங்கொண்டுதான் அனுபவிக்க முடியும். இவற்றில் தாம் கண்டு நுகர்ந்த சிவானந்த அனுபவங்களே யெல்லாம் வள்ளற் பெருமான் வாரி இறைக்கின்றர். அது சுத்த சிவதுரிய அதீத இன்ப நிலை எனப்படும். தாம் இவற்றையெல்லாம் பெற்றவாறு யார் பெறுவார் என்று வியக் கின் ருர் .