பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கூத்தப்பெருமானைத் தரிசிக்கும்பொருட்டுத் திரை நீக்கினர். ஆண்டவனது ஆடல்கண்டு நம்பெரு மானுகிய சிறுகுழவி தளதளவென்று இளநகை யாடியது. ஆண்டவன் சிற்றம்பலத்து நடமாடு வதையும், அதைத் தந்தையின் தோள் மேலிருந்து கண்டுகளித்துக் குழவி நகையாடுவதையுங் கண்ட அந்தணர் இராமையாப் பிள்ளையிடம் ஓடிவந்து, இது கூத்தன் அருட்குழவி என்றுகூறி அவர்களேத் தம்மனைக்கு அழைத்துச்சென்று உ ப ச ரி த் து அனுப்பிவைத்தனர். இவ்வுண்மை நிகழ்ச்சியைக் கா ர ன ப் பட் டு கந்தசாமிப் பிள்ளேயவர்களும், M. கந்தசாமி முதலியார் அவர்களும், பிறரும் கூறுப. சுவாமிகளே இந்நிகழ்ச்சியைப் பின்னர் நினைவுபடுத்திக் கூறுகின்றனர். தாய்முதலாரொடு சிறிய பருவத்தில் தில்லைத் தலத்தில் திரைதுாக்கத் தரிசித்தபோது மேலோட்டமாகக் கா ட் டா ம ல் எல்லாம் வெட்டவெளியாக முற்றுங்காட்டிய என் மெய்யுருவாம் தெய்வமே என்பார். தாய்முதலோ ரோடுசிறு பருவத்தில் தில்லைத் தலத்திடையே திரைதுாக்கத் தரிசித்த போது வேய்வகைமேற் காட்டாதே யென்றனக்கே யெல்லாம் வெளியாகக் காட்டியவென் மெய்யுருவாம் பொருளே -திரு. 6: 38: 44 எனலால் அறியலாம். தெய்வக் குழந்தையின் ஆரும் மாதத்தில் இராமையாப் பிள்ளையவர்கள் சிவனடி சேர்ந்தார். எட்டாம் மாதத்தில் குடும்பத்தில் மூத்த பிள்ளே யாகிய சபாபதிப் பிள்ளையவர்கள் தன் தாயார்