பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 உடையவர். இவருடைய முகத்தில் சதா சற்று விசனக்குறி காணப்பட்டிருக்கும். வடலூர், கருங் குழி என்ற இடங்களுக்குச் சென்று அங்கு நீண்ட காலமிருந்தனர். அங்கிருக்கும்போது இ வ ர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந் திருப்பதுண்டு. இவர் எங்குச் சென்ருர் என்பதை அறிவோர் எவருமிலர். இப்படி வெகுநாள் மறைந் திருப்பார். இவர் இறுதிக்காலத்தில் முடியை நீள மாய் வளரவிட்டிருந்தார். இவர் யோகிகளுக்கு அடுக்காத வ ழ க் க ம ா கி ய ஆர்க்காடு சோடு தரித்திருந்தார் ’’ என்று பிள்ளைப்பெருமான் தோற்றத்தைத் தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியுள்ளார். மற்று, இவர் உயிர் இரக்கமும், ஆன்ம உருக்கமும், உருவெடுத்தாற்போலக் காணப்பட்டார். இந்நாளில் சிவநேச வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவமாலை, இங்கிதமாலே முதலியவற்றையும், இரண்டாந் திருமுறையையும் பாடினர் என்ப. தொழுவூர் வேலாயுத முதலியார் வேலாயுத முதலியார் என்னும் ஒரு தமிழ் வித்துவான் சென்னையிலிருந்தார். அவர் 1849ஆம் ஆண்டில் கடுமையான நடையில் நூறு செய்யுள் களைப் பாடி அவற்றைக் கொண்டுபோய் பிள்ளைப் பெருமானிடம் சங்கச் செய்யுளென்றும், பழைய ஏட்டில் காணப்பட்டதென்றும் சொல்லிக் கொடுத் தார். சிறிதுநேரம் அவற்றைப் பார்த்துவிட்டு பிள்ளைப்பெருமான், இவை கற்றுக்குட்டிப் பாடல்