பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 விட்டது. தந்தையார் மிகவும் வருந்தி அடிகளே அழுந்தி நினைந்து அழுதுகொண்டிருக்கும் அத் தருணத்தில் வடலூரில் பிரசங்கம் செய்துகொண் டிருந்த நம்பெருமான் அவர் வீட்டருகில் தோன்றிக் கதவைத் தட்டினர். வேதநாயகம்பிள்ளை கதவைத் திறந்து சுவாமிகளைக் கண்டு வணங்கினர். நம் பெருமான் உ ள் ேள சென்று அவர் மகனுக்கு திருநீறு தடவிக் கண்விழிக்கச் செய்து, சிறிது நேரத்திற்குள் உட்காரவுஞ் செய்துவிட்டுப் புறப் பட்டார். மறுநாட் காலையில் வேதநாயகம்பிள்ளே மகனே வண்டியிலழைத்துக்கொண்டு வடலூருக்கு வந்தார். அப்போது தருமச்சாலையில் பிரசங்கம் செய்துகொண்டிருந்த இராமலிங்கப் பெருமான் வெளியில் வந்து இருவருக்கும் திருநீறு அளித்து, "நேற்று நிகழ்ந்தது ஆண்டவன் திருவிளையாட்டே ஆதலால் அதை வெளியிடவேண்டாம்” என்று கூறித் தருமச்சாலைக்குள் சென்ருர். முதல்நாள் இரவு முழுவதும் சுவாமிகள் தருமச்சாலையிலேயே பிரசங்கம்செய்துகொண்டிருந்த .ெ ச ய் தி ைய அறிந்து இருவரும் அடிகளின் சிவானுபவப் பேற்றையுணர்ந்து வி ய ந் து துதித்தனர். இவ் வுண்மை நிகழ்ச்சிக்கு அருட்பாவில் மேற்கோள் இல்லை. இவ்வாருக இராமலிங்கப் பெருமான் வடலூரில் தருமச் சாலையில் தங்கியிருந்துகொண்டு அற்ருர் அழிபசி தீர்த்தும், நோயுற்றுத் தம்மை அண்டி வருபவர்க்கெல்லாம் நோய் நீக்கியும், வேண்டு வார்க்கு வேண்டுவனவற்றை அவரவர் தகுதிக்