பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 எல்லா உயிர் உடம்புகளிலும் புகுந்துகொண்டு, எல்லாந்தாமாகி நின்றனராதலின் வெறும் அறை யாக இருந்ததில் வியப்பில்லை. கடையை விரித்தோம், கொள்வாரில்லை; கடையைக் கட்டிக்கொண்டோம்” என்று அடிகள் நொந்துகொண்டனர். உலகர் அனைவரையும் சாதி, சமய, மத, இன, மொழி, நிற, நா ட் டு வேற்றுமைகள் எல்லாம் அற்ற வாழ்வில், ஆன்ம நேய ஒரும்ைப்பாடு விளங்கி, வாழவைப்பதற்குத் தம்மை ஆண்டவன் தோற்றுவித்தான் என்பது இன்னும் ஈடேறவில்லையே! எல்லோரும் இகத்தே பரத்தைப் பெற்று ம கி ழ் த ல் என்று வருமோ? எனினும், சுத்த சன்மார்க்கச் செந்நெறி நிற்கும் புண்ணியர்க்கு வேண்டுவன எல்லாம் அவரது * தனித்துரைத்த தனிமறை'யில் பொதிந்து கிடக் கின்றன. ஆதலின், அடிகள் தம் அருள்நெறியில் நின்று உய்வோமாக. - திருநி லைத்துநல் லருளொடும் அன்பொடுஞ் சிறப்பொடுஞ் செழித்தோங்க உருதி லைத்திவண் மகிழ்வொடு வாழ்வுற வுவந்துநின் னருள்செய்வாய் இருநி லத்தவ ரின்புறத் திருவருள் இயல்வடி வொடுமன்றிற் குருதி லைத்தசற் குருவெனு மிறைவநின் குரைகழற் பதம்போற்றி. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.