பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கொள்ளும் அருளைப் பெறும். ஆன்மா அருளே நுகருங்கால் ஆன்ம சிற்சத்தியாகி, பரையாகி, அருட்சத்தியாகி அருளுருவில் அருளே அனுப விக்கும். பின்னர் வான்வடிவில் நின்று சிவானு பவம் பெற்றுச் சிவமாகிச் சிவானுபவச் செல்வமாகி நிற்கும். இவையனைத்தும் இவ்வுலகில் இம்மல உடம்பின் மாற்றத்தால் உண்டாகும். ஆன்மா கெடுவதில்லை; சுத்த தேகத்தில் சுத்தான்மாவாக வும், பிரணவ தேகத்தில் அருளாகவும், ஞான தேகத்தில் சிவமாகவும் நிலவும். தத்துவங்களும் மலங்களும் தவிர்ந்துபோய், ஆன்ம தற்போதமும் போய் சத்துவம் ஒன்றே தனித்துநின்று ஓங்கும். சுத்த அறிவனைத்தும் ஆனந்தமாகி அருளில் திளைக்கும். அருளைச் சார்ந்த ஆன்மா அருட் செயலேயும், சிவத்தைச் சார்ந்து சிவச் செயலேயும் செய்யவல்லது. உலகுயிர்த் திரள் எலாம் ஒளிநெறி பெற்றிட இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை -திரு. 6: 1:1577 என்று சுவாமிகள் வித்தகம் பேசுகின்றனர்.