பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 வென்றாய். இல்லையேல் இறந்து போயிருப்பாய். மற்றும், நீ கயிலை மலையை எடுத்தபோது காலால் அழுத்தி உன்னை வென்ற சிவன் தந்த வில்லையே என் கணவன் (இராமர்) அன்று ஒடித்ததை நீ கேள்விப்பட்டதில்லையோ -என்றெல்லாம் கடிகின்றாள்: தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் வாளால் வென்றாய் அன்றெனின் இறத்தி அன்றே! (116) "குன்று நீ எடுத்த நாள்தன் சேவடிக் கொழுந்தால் - ©._6ᏈI 6a6öᎢ வென்றவன் புரங்கள் வேவத் தனிச்சரம் துரந்தமேரு என்துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது 治 * இற்று வீழ்ந்த அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா!' (118) இராவணன் கயிலையைத் தூக்கியபோது, சிவன் தன் கால் அடி முழுவதாலும் கூட மலையை அழுத்தவில்லை; கால் அடியில் உள்ள விரலின் நுனியால் மட்டுமே அழுத் தினான் என்பதைச் சேவடிக் கொழுந்தால்' என்னும் தொடரால் குறிப்பிட்டிருக்கும் கம்பர் சொல்லாட்சி மிகவும் நயத்திற்கு உரியது. மேலும் சீதை இராவணனை நோக்கிக் கூறுகின்றாள்: மண்ணுலகும் விண்ணுலகும் அஞ்சும்படி வாழும் கொடியோனே! நீ என் கணவரை, திருமால் என்றும் நான் முகம் என்றும் சிவன் என்றும் எண்ணி விட்டாயோ? என் கணவர் அவர்களினும் ஆற்றல் மிக்கவர். உன் கெடு மதியை விலக்கிக் கொள்: சு-8